Reliance launches online grocery platform JioMart : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் தற்போது ஜியோமார்ட் என்ற ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை மளிகை பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக துவங்கியுள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த சேவை தற்போது நவி மும்பை, கல்யான் மற்றும் தானே ஆகிய இடங்களில் மட்டும் தான் செயல்பட்டு வருகிறது.
ஜியோமார்ட் என்றால் என்ன?
ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த சேவை மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான மளிகை மற்றும் இதர பொருட்களை அருகில் இருக்கும் விற்பனையாளர்களிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக இந்த விற்பனையை மேற்கொள்ளாமல் ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை பெற்று ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது.
ஜியோவின் ஜியோமார்ட் எப்படி செயல்படுகிறது?
கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு விழாவின் போது 3 கோடி ஆஃப்லைன் விற்பனையாளர்களை 20 கோடி ஆன்லைன் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று ஏற்கனவே அம்பானி அறிவித்திருந்தார். தற்போது மகாராஷ்ட்ராவில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த செயலி இனி இந்தியா முழுவதும் செயல்பட துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமேசான் ப்ரைம் நவ், க்ரொஃபெர்ஸ், பிக் பாஸ்கட் மற்றும் ஃப்ளிப்கார்ட்டினை நேரடி போட்டியாளர்களாக கொண்டு களம் இறங்கியுள்ளது ஜியோ நிறுவனம், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து மெசேஜ்களை அனுப்பி வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
மேலும் படிக்க : WhatsApp features 2020 : அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்?