ஆண்ட்ராய்ட் ஆட்டோ : ரெனால்ட், நிசான் மோட்டார், மிட்ஸுபிஷி போன்ற கார் நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்த செல்ல முடிவு செய்திருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் கார்களின் டேஷ்போர்ட்களில் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தினை பயன்படுத்த இருக்கிறது.
ஆல்பாபெட் இங்க் நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி மேப்பிங் மற்றும் நேவிகேஷனை உபயோகித்து வருகிறது இந்த நிறுவனங்கள். நிறைய ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ஆப்பிளின் கார்பிளே மற்றும் ஆண்ராய்ட் ஆட்டோவினை மொபைலின் துணை கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள்.
கூகுள் மற்றும் ஆப்பிளை போன் வழியாக பயன்படுத்தும் போது ஓட்டுநர் எங்கே இருக்கிறார், எங்கே அவர் செல்ல வேண்டும், அருகில் இருக்கும் கடைகள், மற்றும் நிறுவனங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதனால் நிறைய நிறுவனங்கள் இந்த இரண்டு செயலிகளையும் அடுத்த படிக்கு உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த செயலிகளின் பயன்பாட்டினை நேரடியாக டேஷ்போர்டில் பயன்படுத்தும் போது போன்களின் தேவை முற்றிலும் ஒரு ஓட்டுநருக்குத் தேவைப்படாது.
ஆண்ட்ராய்ட் ஆட்டோ - ஆண்ட்ராய்ட் செயலிகள்
இதற்கு முன்பு ஆண்ட்ராய்ட் செயலிகளை பயன்படுத்தும் முறையை வால்வோ கார்கள் மட்டுமே அறிவித்திருந்தது என கார்ட்னெரில் ஆராய்ச்சி அதிகாரியாக செயல்படும் மைக் ராம்ஸே கூறியிருக்கிறார்.
ரெனால்ட் - நிசான் - மிட்ஸூபிஷி கார்கள் கொண்டு வர இருக்கும் இந்த புதிய டேஷ்போர்டில் ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படும் செயலிகள், பாடல்கள், மற்றும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுள் அசிஸ்டெண்ட்டினை பயன்படுத்தி வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாகவும் வாகனங்களையும் செயலிகளையும் இயக்கலாம்.