Advertisment

குடியரசு தினம்: தேசிய கொடியை 24 மணி நேரமும் கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம்

இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கும் மற்றும் கொண்டாடும் நாளாகும்.

author-image
WebDesk
New Update
sasaae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நம் இந்தியா 1947 ஆகஸ்ட் 15"ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடக உள்ளது.

Advertisment

 இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கும் மற்றும் கொண்டாடும் நாளாகும்.

 

இந்த நாட்களில் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடப்படும்.

 

இது மட்டுமல்லாமல் மத்திய ரயில் நிலையம் விமான நிலையம், மாநில ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடிகள் தினந்தோறும் ஏற்றபடும்.இதனிடையே உயர பறக்க விடப்படும் இந்த தேசிய கொடிகள் ஒரு சில நேரங்களில் காற்று இல்லாமல் கம்பீரமாக காணப்படாமல் சுருண்டு கிடக்கின்றன.

 

இதனை கருத்தில் கொண்டு 75 வயது குடியரசு தின விழாவையொட்டி கோவையை சேர்ந்த காற்று நிறுவனமான எல்ஜி(ELGI) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து எல்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில்சுமார் 12லட்சம் மதிப்பில் 200 அடி கம்பத்தில் தேசியக்கொடி 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏர் கம்ப்ரசர் பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம், இது வியாபாரத்துக்கு அல்ல ,இது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே,இந்த திட்டத்தின் செயல்முறைகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்க தயாராக உள்ளோம். மேலும் இந்த கொடிகளை பறக்கும் முறைகளை தான் இந்திய நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment