/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1794.jpg)
Revolt RV 400 Price in India, Specs, Features - ரிவோல்ட் RV பைக் இன்று அறிமுகம்... விலை என்ன? வசதிகள் என்னென்ன?
Revolt RV 400 Price in India: ரிவோல்ட் Intellicorp நிறுவனம், தனது எலக்ட்ரிக் மோட்டார் வாகனமான RV 400 மாடல் பைக்கை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்தது. ஜூன் 18ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், டெல்லி மற்றும் புனேவில் உள்ள வாடிக்கையாளர்கள் வாங்கும் விதமாக கடந்த ஜூன் 25ம் தேதி நிறுவனத்தின் வெப்சைட்டிலும், ஜூலை 5ம் தேதி அமேசன் இந்தியா தளத்திலும் ரூ.1,000 பணமாக பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டது.
இரண்டு வருட கால தீவிர பரிசோதனைக்கு பின்னர், இந்த RV 400 மாடல் பைக் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Revolt RV 400 பைக் விலை - ரூ.1 லட்சம்
156 கி.மீ. ரேஞ். 85 kmph வேகம். Revolt Intellicorp மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா கண்டறிந்த ஒன்றாகும்.
Revolt RV 400 பைக் இரண்டு கலரில் கிடைக்கிறது. ரெபெல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
ரிவோல்ட் இண்டெல்லிகார்ப், ரிவோல்ட் ஆப் வசதியையும் தருகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்த ஆப்-ஐ பயன்படுத்த முடியும். இதன் மூலம் பைக் இருக்கும் இடத்தை அறிதல், வீட்டிற்கு வந்து பேட்டரி டெலிவரி செய்யும் வசதி, திருடுவதை தடுக்கும் வசதி, ஒலி தேர்வு வசதி என இன்னும் பல வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மேலும், USD முன்பக்க ஃபோர்க்ஸ், டிஸ்க் பிரேக்குகளுடன் 17 இன்ச் அல்லாய் சக்கரங்கள், ஆர்பிஎஸ் ஆகிய வசதிகளும் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.