Revolt RV400 Sales dates announced : ஜூன் 18-ஆம் தேதி இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. கூர்கானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் பைக்குகளை வாங்க ஏற்கனவே டெல்லி மற்றும் புனே ஆகிய இடங்களில் முன்பதிவு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நீங்கள் இந்த பைக்கிற்கு முன்பதிவினை அமேசான் அல்லது ரிவால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Revolt RV400 Sales dates announced
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் revolt RV400 முதலில் ஜூலை 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது ஆகஸ்டு 7ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் பைக்குகள்... விலையும் கொஞ்சம் குறைச்சல் தான்
RV400 Price
ரிப்பிள் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் என்று இரு நிறங்களில் வெளியாகும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ஒரு லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு கட்டணம் 1000 ரூபாய் ஆகும்.
டிட்டாச்சபிள் லித்தியம் & அயன் பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை இந்த பைக் செல்லக்கூடியது. டெல்லி மற்றும் புனேவில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத், மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அடுத்த மூன்று மாதங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரிவால்ட் நிறுவனம்.
மேலும் படிக்க : ரிவால்ட் நிறுவனத்தின் ஆர்.வி. 400 சிறப்பம்சங்கள் குறித்து ஒரு பார்வை
Revolt RV400 சிறப்பம்சங்கள் : Eco, City and Sport Mode
எக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற மூன்று வித்தியாசமான ரைடிங் மோட்களை உங்களுக்கு அளிக்கிறது இந்த பைக்.
எக்கோ மோடில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கி.மீ வரை பயன்படுத்தலாம். சிட்டி மோடில் 80 முதல் 90 கி.மீ வரை பயணிக்கலாம்.
ஸ்போர்ட்ஸ் மோடில் நாம் எப்படி வண்டி ஓட்டுகின்றோம் மற்றும் எந்த விதமான சாலையில் ஓட்டுகின்றோம் என்பதைப் பொறுத்து கி.மீகள் வேறுபடும்.