ஜியோ பயனர்களுக்கு செம சான்ஸ்; ரூ.35,100 ப்ரீமியம் ப்ளான் இனி இலவசம்... ரிலையன்ஸ்-கூகுள் கூட்டாக அறிவிப்பு!

தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு, கூகுளின் சக்திவாய்ந்த 'ஜெமினி ஏ.ஐ ப்ரோ' (Gemini AI Pro) திட்டமானது 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.35,100 ஆகும்.

தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு, கூகுளின் சக்திவாய்ந்த 'ஜெமினி ஏ.ஐ ப்ரோ' (Gemini AI Pro) திட்டமானது 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.35,100 ஆகும்.

author-image
WebDesk
New Update
Google partner to offer free Gemini AI

ஜியோ பயனர்களுக்கு ரூ.35,100 மதிப்பு உள்ள ப்ரீமியம் ப்ளான் ஃப்ரீ... ரிலையன்ஸ் x கூகுள் அதிரடி அறிவிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-கூகுள் நிறுவனங்கள், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை விரைவுபடுத்தும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு கூகுளின் பிரீமியம் 'ஏ.ஐ. ப்ரோ' (AI Pro) திட்டமானது 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ.35,100 ஆகும்.

Advertisment

ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜெமினி ஆஃப்-ல் கூகுளின் மிகவும் திறன் வாய்ந்த ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro) மாடலுக்கான உயர்தர அணுகல், அதிநவீன நானோ பனானா (Nano Banana), வியூ 3.1 (Veo 3.1) மாடல்களைப் பயன்படுத்தி அற்புதமான படங்கள்/வீடியோக்களை உருவாக்கும் அதிக லிமிட், படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்குரிய நோட்புக் LM-க்கான விரிவாக்கப்பட்ட அணுகல், 2 TB கிளவுட் சேமிப்பகம் மற்றும் பல சலுகைகள். தகுதியுள்ள ஜியோ பயனர்கள் இந்தச் சலுகையை MyJio ஆப் வழியாக எளிதாக ஆக்டிவேட் செய்யலாம். முதற்கட்டமாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட, அன்லிமிடெட் 5G பிளானில் உள்ள பயனர்களுக்கு இது வழங்கப்படும். மிக விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ரிலையன்ஸ், கூகுள் கிளவுட் உடன் இணைந்து, அதன் மேம்பட்ட ஏ.ஐ. ஹார்டுவேர் ஆக்சிலரேட்டர்களான TPU-களுக்கான (டென்சார் பிராசசிங் யூனிட்ஸ்) அணுகலை விரிவுபடுத்துகிறது. இது, அதிகச் சிக்கலான ஏ.ஐ. மாடல்களை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவும். இந்நடவடிக்கை இந்தியாவின் தேசிய ஏ.ஐ. முதுகெலும்பைத் (National AI Backbone) பலப்படுத்தி, இந்தியாவை உலகளாவிய ஏ.ஐ. வல்லரசாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும்" என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெமினி எண்டர்பிரைஸ்: நிறுவனங்களுக்கான 'ஜெமினி எண்டர்பிரைஸ்' தளத்தை இந்திய நிறுவனங்களிடம் கொண்டு சேர்க்க, ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் ஒரு மூலோபாயப் பங்குதாரராகச் செயல்படும். இதன் மூலம், பாதுகாப்பான சூழலில் ஒவ்வொரு ஊழியருக்கும் சிறந்த ஏ.ஐ. கருவிகள் கிடைக்கும். இந்தத் தளத்தில் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் அதன் சொந்த பிரீ-பில்ட் நிறுவன ஏ.ஐ. ஏஜென்ட்களையும் வழங்கும்.

Advertisment
Advertisements

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில்,"எங்கள் நோக்கம் 145 கோடி இந்தியர்களுக்கும் ஏ.ஐ. நுண்ணறிவு சேவைகளைக் கிடைக்கச் செய்வதுதான். கூகுள் போன்ற கூட்டாளிகளுடன் இணைந்து, இந்தியாவை வெறும் ஏ.ஐ-ஆல் இயக்கப்பட்டதாக இல்லாமல், ஏ.ஐ-ஆல் அதிகாரம் பெற்ற தேசமாக உருவாக்க இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார்.

கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பேசுகையில், "நாங்க இந்தக் கூட்டாண்மையை ஏ.ஐ. சகாப்தத்திற்கு கொண்டு வருகிறோம். இன்றைய அறிவிப்பு, கூகுளின் அதிநவீன AI கருவிகளை நுகர்வோர், வணிகங்கள் மற்றும் இந்தியாவின் துடிப்பான டெவலப்பர் சமூகத்தின் கைகளில் சேர்க்கும். AI அணுகலை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த இந்தக் கூட்டணி ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Jio Google

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: