ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) மற்றொரு பட்ஜெட் 4ஜி ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோபோன் ப்ரைமா 2, 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் குவால்காம் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கு முந்தைய வெர்ஷனை விட இந்த போன் மூன்றாம் தரப்பு பயன்பாடும் இல்லாமல் நேரடியாக வீடியோ காலிங் வசதி கொண்டுள்ளது.
இந்த போன் தற்போது ரூ. 2,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2,000 mAh பேட்டரி உடன்
கேண்டி பார்-ஸ்டைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சாதனத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன, பின்புறம் ஒன்று மற்றும் முன்பக்கத்தில் ஒரு செல்ஃபி கேமரா உள்ளது, இது வீடியோ அழைப்புகளுக்கும் செல்ஃபி எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த போன் KaiOS அடிப்படையில் இயக்கப்படுவதால் இது யூடியூப், கூகுள் அசிஸ்டென்ட், பேஸ்புக், ஜியோபே போன்ற பயன்பாடுகளுடன் யு.பி.ஐ கட்டணம் செலுத்தும் வசதி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ சாட் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வருகிறது.
JioPhone Prima 2 2.4-இன்ச் டிஸ்ப்ளே, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், microSD கார்டு ஸ்லாட், LED டார்ச் மற்றும் FM ரேடியோ வசதி ஆகியவையும் கொண்டுள்ளது. அதனுடன் ஜியோ இதற்கு பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“