இந்தியாவில் பல்வேறு நதிகளும், அதிலிருந்து பிரிந்து நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் நதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் குறித்தும் இங்கு அறிந்து கொள்வோம்.
1. இந்தியாவின் மிக நீளமான நதி எது?
அ) சிந்து நதி
ஆ) கோதாவரி ஆறு
இ) கங்கை நதி
ஈ) நர்மதா நதி
2. "தக்ஷின் கங்கா" (தெற்கின் கங்கை) என்றும் அழைக்கப்படும் நதி எது?
அ) கிருஷ்ணா நதி
ஆ) காவிரி ஆறு
இ) கோதாவரி ஆறு
ஈ) பிரம்மபுத்திரா நதி
3. "வங்காளத்தின் சோகம்" எனக் கூறப்படும் நதி எது?
எப்போதும் கடும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த நதி "Sorrow of Bengal" என்று அழைக்கப்படுகிறது.
அ) யமுனை நதி
ஆ) பிரம்மபுத்திரா நதி
இ) மகாநதி ஆறு
ஈ) தாமோதர் நதி
4. இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls) எந்த நதியில் இருந்து வருகிறது?
அ) கிருஷ்ணா நதி
ஆ) காவேரி ஆறு
இ) ஷராவதி ஆறு
ஈ) நர்மதா நதி
5. இந்தியாவின் தேசிய நதி எது?
அ) நர்மதா நதி
ஆ) கோதாவரி ஆறு
இ) கங்கை நதி
ஈ) பிரம்மபுத்திரா நதி
பதில்கள்
1. கங்கை நதி
2. கோதாவரி ஆறு
3. தாமோதர் நதி
4. ஷராவதி ஆறு
5. கங்கை நதி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“