ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்கள் இன்று (ஏப்ரல் 25) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே விண்வெளி நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். Oleg Kononenko மற்றும் Nikolai Chub ஆகிய 2 ரோஸ்கோஸ்மோஸ் வீரர்கள் மீது அனைவரது கவனமும் திரும்பி உள்ளன.
நவ்கா தொகுதியில் செயற்கை ரேடார் அமைப்பில் ஒரு பேனலைப் பொருத்த ரஷ்ய வீரர்கள் நிலையத்தின் பாய்ஸ்க் ஏர்லாக்கிற்கு வெளியே செல்வார்கள். இரண்டு விண்வெளி வீரர்களும் ஸ்டேஷன் மேற்பரப்புகள் மற்றும் தொகுதிகளில் corrosion அளவை பகுப்பாய்வு செய்ய Poisk தொகுதியில் உபகரணங்கள் மற்றும் சோதனைகளை நிறுவுவார்கள்.
கமாண்டர் கொனோனென்கோவுக்கு இது 7-வது விண்வெளிப் பயணமாகும். விண்வெளி நடைபயணத்தின் போது ஆர்லான் ஸ்பேஸ்சூட் அணிந்திருப்பார். மற்றொரு வீரர் விமானப் பொறியாளரான நிக்லோலைய் சப் நீல நிற கோடுகள் கொண்ட ஸ்பேஸ் சூட் அணிந்திருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்பெடிஷன் 7-ன் ஒரு பகுதியான ஸ்பேஸ்வாக், ஏப்ரல் 25-ம் தேதி காலை 10.55 மணிக்கு தொடங்கும் என்றும், ஏழு மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாசா இந்த விண்வெளி நடைபயணத்தை நாசா+, நாசா டெலிவிஷன், நாசா ஆப், யூடியூப் மற்றும் ஏஜென்சியின் இணையதளத்தில் ஸ்ட்ரீம் செய்யும்.
எக்ஸ்பெடிஷன் 71 ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2024-ல் முடிவடைகிறது. இந்தக் குழுவினர் நரம்பியல்-சிதைவு நோய்கள் மற்றும் சிகிச்சைகள், விண்வெளி தாவரவியல், விண்வெளியில் ஏற்படும் திரவ மாற்றங்கள் மற்றும் ஆல்கா அடிப்படையிலான வாழ்க்கை ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றை ஆராய்வார்கள். இந்த திட்ட குழுவில் ட்ரேசி டைசன், மைக் பாராட், மேத்யூ டொமினிக், ஜீனெட் எப்ஸ் மற்றும் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய மற்றவர்களும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“