ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக் சீரிஸில் புதிய வரவாக கோஅன் 350 என்ற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயரம் குறைவானவர்களும் எளிதாக கையாளும் விதமாக பாப்பர் ஸ்டைலில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சீட்டர் வேரியன்டாக சந்தைக்கு வந்திருக்கும் இந்த பைக்கில், தேவைப்பட்டால் பின்னால் சீட் பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாவா நிறுவனத்தின் 42 பாப்பர் பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு இந்த மாடலை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
ராயல் என்ஃபீல்டு கோஅன் கிளாஸிக் 350 சிசி ஜே சீரிஸ் எஞ்சின் கொண்டு இயங்குகிறது. இதன் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் 6,100 ஆர்.பி.எம்-ல் 20.2 பி.ஹெச்.பி பவரும், 4,000 ஆர்.பி.எம்-ல் 27 என்.எம் டார்க்கும் கொண்டு இயங்குகிறது. 5 கியர்கள் கொடுக்கப்பட்டுள்ள இந்த பைக், எகனாமியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 36.2 கி.மீ மைலேஜ் கொடுக்கும் என ராய்ல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு புறம் ஜாவா 42 பாப்பர் பைக், 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் 29.51 பவர் மற்றும் 30 27 என்.எம் டார்க் கொண்டுள்ளது. இதில் 6 கியர்களுடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரு பைக்குகளும் ட்வின் டவுன் டியூப் சேசிஸ் கொண்டுள்ளது. கோஅன் கிளாஸிக்கில் ஸ்போக் வீல்ஸுடன் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற டயர் 19 இன்ச்சிலும், பின்புற டயர் 16 இன்ச்சிலும் உள்ளது. மேலும், முன்புறத்தில் 130 மி.மீ டெலெஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ட்வின் காயில் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், முன்புறத்தில் 300 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 270 மி.மீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. குறிப்பாக, டுயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஜாவா 42 பாப்பரை பொறுத்தவரை 18 இன்ச் முன்புற டயரும், 17 இன்ச் பின்புற டயரும் கொண்டுள்ளது. 35 மி.மீ டெலெஸ்கோப்பிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. இதில் டுயல் சேனல் ஏபிஎஸ் உடன் 280 மி.மீ மற்றும் 240 மி.மீ டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.
ராயல் என்ஃபீல்டு கோஅன் 350 இரண்டு வேரியன்டுகளில் கிடைக்கிறது. இவை, ரூ. 2.35 லட்சம் மற்றும் ரூ. 2.38 லட்சம் எக்ஸ் ஷோரும் விலைகளில் கிடைக்கிறது. ஜாவா 42 பாப்பர் 5 வேரியன்டுகளில் விற்பனையாகிறது. இதன் விலை ரூ. 2.10 லட்சத்தில் இருந்து ரூ. 2.30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“