இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள்-08 (EOS-08) கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.எஸ்.எல்.வி (SSLV) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதையடுத்து செயற்கைக் கோள் அறிவியல் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
இ.ஓ.எஸ்-08 செயற்கைக் கோளில் உள்ள ஜி.என்.எஸ்.எஸ்-ரிஃப்ளெக்டோமெட்ரி (ஜிஎன்எஸ்எஸ்-ஆர்) கருவி ரிமோட் சென்சிங் செயல்பாடுகளைத் தொடங்கியது.
முதல் நிலத் தரவு சஹாரா பாலைவனத்தில் சேகரிக்கப்பட்டது, 1 கி.மீ உயர் தெளிவுத்திறன் பயன்முறையைப் பயன்படுத்தி படம் எடுக்கப்பட்டது. இது தற்போதைய CYGNSS கேமராவை விட சிறந்த தெளிவுத் திறன் கொண்டுள்ளது.
இந்தத் தரவு மண்ணின் ஈரப்பதத்தை உயர் தெளிவுத்திறனில் படமெடுக்க உதவியது, இதன் முடிவுகள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்துகின்றன. விரிவான மேற்பரப்பு நீர் வரைபடங்களைக் காட்டும் மற்றொரு தரவுத்தொகுப்பு ஆகஸ்ட் 21 அன்று அமேசான் மழைக்காடுகளில் பெறப்பட்டது.
தொடர்ந்து, முதல் கடல் தரவு ஆகஸ்ட் 19 அன்று பசிபிக் பெருங்கடலில் சேகரிக்கப்பட்டது, இது காற்றின் வேகம் மற்றும் அலை உயரம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“