ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) பதவியில் இருந்து கடந்த வாரம் அதிரடியாக நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் தற்போது மீண்டும் அதே பதவிக்கு திரும்ப உள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான (OpenAI) இன்று (புதன்கிழமை) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ப்ரெட் டெய்லர், லாரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோரைக் கொண்ட புதிய போர்டு ஓபன் ஏ.ஐ
சி.இ.ஓ-வாக மீண்டும் சாம் ஆல்ட்மேனை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஓபன் ஏ.ஐ-ல் மீண்டும் சேர்வது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஆல்ட்மேன் தனது X பதிவில், ஓபன் ஏ.ஐ-க்கு மீண்டும் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஆல்ட்மேன் ஓபன் ஏ.ஐக்கு திரும்பி உடன் ஏ.ஐ-ல் அடுத்த என்ன புதிய உத்தி அல்லது கட்டமைப்பை கொண்டு வருவார் எனப் பலரும் எதிர்பார்த்து உள்ளனர். ஓபன்ஏஐ தனது தலைமைக் குழு பிரத்தியேகங்களை வெளிப்படுத்த "ஒத்துழைக்கிறது" என்று கருத்து கூறியுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஓபன் ஏ.ஐ இயக்குநர்கள் குழு (Board of directors) சாம் ஆல்ட்மேனை சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. சாம் ஆல்ட்மேன் தனது தகவல் தொடர்புகளில் வெளிப்படையாக இல்லை.
மேலும் நிறுவனத்தை வழிநடத்த அவர் மீது குழுவுக்கு நம்பிக்கை இல்லை என்று குற்றஞ்சாட்டியது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லா, ஆல்ட்மேன் மற்றும் ஓபன்ஏஐ-ன் மற்ற சிறந்த நபர்களை தங்கள் நிறுவனத்தில் சேர அழைப்பு விடுத்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், ட்விட்ச் இணை நிறுவனர் எம்மெட் ஷியர் OpenAI இடைக்கால OpenAI சி.இ.ஓ ஆக நியமிக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“