144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்!

108 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் தங்களுடைய கேலக்ஸி 11 சீரிஸில் அறிமுகம் செய்கிறது.

By: Updated: December 18, 2019, 12:42:49 PM

Samsung 144MP camera sensors :  ஏற்கனவே 108 எம்.பி. செயல்திறன் கொண்ட கேமராக்கள் வரை செல்போன்களில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் 144 எம்.பி செயல்திறன் கொண்ட கேமராவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டெர் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட்டில் 144 எம்.பி. செயல்திறன் கொண்ட சென்சார்களை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

14 நானோ மீட்டர் டெக்னாலஜி மூலம் தான் 100 எம்.பிக்கு மேலான செயல்திறன் கொண்ட சென்சார்களை உருவாக்கிட இயலும்.  ஃபின் எஃப்.ஈ.டி தொழில்நுட்ப உதவியுடன் இந்த சென்சார் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளாது. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் சென்சார்கள் அனைத்தும் சி.மாஸ் இமேஜ் சென்சார்கள் ஆகும்.

ஆரம்பத்தில் 48 எம்.பி. கேமரா வெளியானது தான். அந்த ஐடியா அதோடு நின்றுவிடாமல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து அளவுக்கு அதிகமான மெகா பிக்சல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.  ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் , ரெட்மீ கே30 மற்றும் ரியல்மீ எக்ஸ்2 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களில் 64 எம்.பி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. 108 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் தங்களுடைய கேலக்ஸி 11 சீரிஸில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : உங்கள் போனின் நெட்வொர்க்கை மாற்றுவது இனி மேலும் சுலபம் : ட்ராயின் புதிய விதிமுறைகள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Samsung working on 144mp camera sensor for smartphones

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement