ஸ்மார்ட்போன் உலகில் முன்னணியில் இருக்கும் ஐபோன் மற்றும் சாம்சங் இடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க, சாம்சங் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை சாம்சங் காலக்சி எஸ்-8 மற்றும் நோட் 8 பயன்படுத்த அழைத்துள்ளது. அதுவும் இலவசமாக.
தென் கொரியாவில் நடக்கவிற்கும் காலக்சி அனுபவ நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் ஐபோன் வாடிக்கையாளர்கள் ஒரு மாதம் முழுவதும் காலக்சி எஸ்-8 மற்றும் நோட் 8 பயன்படுத்தலாம். இதற்காக பதிவு செய்ய குறைவான கட்டணம் $45 வசுலிக்கப்படுகிறது.
சாம்சங் 10,000 வாடிக்கையாளர்களை தேர்வு செய்து டிசம்பர் 1ல் இருந்து 11குள் சாம்சங் டிஜிட்டல் பிளாசாவிற்கு வரவழைத்து, ஒரு மாதம் இலவசமாக பயபடுத்துவதற்கான ட்ரையலை பதிவு செய்ய உள்ளது.
இதில் பங்குப்பெற நினைப்பவர்கள், கைபேசிக்கான பணம் மற்றும் பங்கேற்பதற்கான கட்டணம் $45 செலுத்த வேண்டும். ஒரு மாதம் பயன்படுத்தியப்பின் வேண்டும் என்றால் கைபேசியை வைத்துக்கொள்ளலாம்.
இல்லையெனில் ஒரு மாதம் கழித்து கைபேசியை திருப்பிக்கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு மாதம் கழித்து சாம்சங் கைபேசியை வைத்துக்கொள்ளும் வாடிகையாளர்களுக்கு புளுடூத் ஸ்பீக்கர் போன்ற இதர சாம்சங் பொருட்கள் இலவசமாக கிடைக்கும். திருப்பிக் கொடுப்பவர்களுக்கு பங்கேற்க செலுத்தியக் கட்டணம் நஷ்டமாகும்.
இதெல்லாம் இந்தியாவுக்கு கிடையாதாம். தென் கொரியாவில் மட்டும்தானாம். அப்ப ஏன் இதை சொன்னீங்க என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்குது.