சாம்சங்கின் 'கேலக்ஸி F' தான் நாம் எதிர்பார்த்த Foldable ஸ்மார்ட்போனா ?

7 இன்ச் டிஸ்பிளே,2 சிம் கார்டுகள் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ்ஜுடன் வெளியாக உள்ளது சாம்சங் கேலக்ஸி F

Samsung Galaxy F : இப்போது வரும், அப்போது வரும் என வெகுநாட்கள் காத்துக் கொண்டிருந்த Foldable போனான சாம்சங்கின் Foldable போன் பற்றிய முக்கிய அறிவிப்பினை நாளை வெளியிட இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

நாளை சான்ஃபிரான்சிஸ்கோ நகரில், சாம்சங் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபிரன்ஸ் நடைபெற இருக்கிறது. இதில் சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போனான கேலக்ஸி F பற்றிய முக்கியமான செய்திகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Samsung Galaxy F நாளை அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் தலைவரான டி.ஜே. கோஹ் இது குறித்து ஏற்கனவே ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு அந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.  மேலும் சாம்சங் மொபைல் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் Where Now Meets Next என்ற வீடியோ ஒன்றினை ட்வீட் செய்திருக்கிறது.

தி பெல் என்ற செய்திக் குறிப்பில், சாம்சங் கிட்டத்தட்ட 10 லட்சம் ஃப்லெக்ஸிபிள் டிஸ்பிளேக்களை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது என்று கூறியிருந்தது.

இந்தியா, கொரியா, மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இந்த போன்களுக்கான காப்புரிமத்தினை பதிவு செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். இன்ஃபினிட்டி ஃப்ளக்ஸ், இனிஃபினிட்டி, இன்ஃபினிட்டி வி, இன்ஃபினிட்டி ஓ, இன்ஃபினிட்டி யூ போன்ற பெயர்களில் ட்ரேட்மார்க்கினை ரெஜிஸ்டர் செய்து வருகிறது சாம்சங் நிறுவனம்.

7 இன்ச் டிஸ்பிளே,இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி, மற்றும் 512 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வெளியாக உள்ளது இந்த போன். இதன் விலை தோராயமாக ரூ. 1,09,432 இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close