/tamil-ie/media/media_files/uploads/2020/01/Samsung-bezel-less-TV.jpg)
Samsung frameless TV Samsung zero bezel tv Q900T
Samsung frameless TV Samsung zero bezel tv Q900T : சாம்சங் நிறுவனத்தின் புதிய டிவி விரைவில் வெளியாக உள்ளது. இந்த டிவியில் இருக்கும் மிக முக்கியமான சிறப்பம்சத்தினை கேட்டால் நீங்கள் நிச்சயமாக வியந்து தான் போவீர்கள். ஆம் இது உலகின் முதல் பெஸல் இல்லாத டிவி. பெஸல் என்றால் என்ன என்கிறீர்களா? டிவி, கம்ப்யூட்டர், அல்லது செல்போன் திரைகளை ஒட்டியிருக்கும் கருப்பு நிற சட்டகம் தான் பெஸல் என்கிறார்கள். செல்போன்களில் பல ப்ராண்ட்களில் கேமரா இருப்பதால் வாட்டர் ட்ராப் நோட்ச் என்றெல்லாம் கொண்டுவரப்பட்டது. சியோமி நிறுவனம் 2016ம் ஆண்டே பெஸெல் இல்லாமல் ஸ்மார்ட்போனை வடிவமைத்து கொடுத்துவிட்டது.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
Tune in on January 6 @ 6:30PM PT/9:30PM ET to watch the Samsung #CES2020 keynote live #AgeofExperience#SamsungCES2020pic.twitter.com/GqoA7NwInH
— Samsung Electronics (@Samsung) December 31, 2019
ஆனாலும் எல்லை எதுவென்று தெரியாமல் ஒரு டிவி. திரை முழுவதும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த டிவியை சாம்சங் நிறுவனம் சி.இ.எஸ் என்ற கஸ்டமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ என்ற கண்காட்சியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிய நிலையில் 4KFilme என்ற இணைய தளம் சாம்சங் நிறுவனத்தின் முதல் டிவியின் புகைப்படத்தை வெளியிட்டது. சாம்சங்கின் ஸீரோ பெஸல் டிவி க்யூ.எல்.ஈ.டி திரையினை கொண்டுள்ளது. இதன் மாடல் எண்கள் Q900T அல்லது Q950T-வாக இருக்கலாம்.
பெஸல் இல்லாததால் என்ன நன்மை என்று கேட்கின்றீர்களா? ஸ்கிரீன் சைஸ் பெரிதாக இருக்கும். அதே நேரத்தில் பெரிய திரையின் மொத்த திரை அளவு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பெஸல் இல்லாத டிவி பார்ப்பதற்கு மட்டும் அழகாக இல்லாமல் உங்கள் திரைப்படங்கள் பார்க்கும் அனுபவத்தையும் மொத்தமாக மாற்றிவிடும்.
மேலும் படிக்க :ஆன்லைனில் மளிகை பொருட்கள்… ஜியோவின் புது அட்வென்ச்சர்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.