கேலக்ஸி ஏ-சீரிஸின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிவித்துள்ளது. இது, நிறுவனத்தின் பிரீமியம் இடைப்பட்ட சந்தையில் சமீபத்திய வெளியீடு. கேலக்ஸி எஸ் 52 மற்றும் கேலக்ஸி ஏ 72 ஆகிய இரண்டு சமர்ட்போன்களும் கேலக்ஸி எஸ் 21 சீரிஸுக்கு பிரீமியம் செலுத்தத் தயாராக இல்லாத பயனர்களை ஈர்க்கவுள்ளன. சமீபத்திய அம்சங்களையும் இந்த சாதனங்கள் கொண்டிருக்கின்றன.
புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் தொலைபேசிகள், சுமார் ரூ.30,180-லிருந்து கிடைக்கும். மேலும், அவை முதன்மை கேலக்ஸி எஸ் 21 வரம்பை விட குறைவாகவே இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ 52-ன் விலை சுமார் ரூ.30,180. அதே சாதனத்தின் 5 ஜி மாடலுக்கு தோராயமாக ரூ. 37,100 செலவாகும். கேலக்ஸி ஏ 72, சுமார் ரூ.38,830 விலையில் விற்கப்படும். வரலாற்று ரீதியாக, கேலக்ஸி ஏ-சீரிஸ் கேலக்ஸி எம்-சீரிஸை விட விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விவோ மற்றும் ஒப்போ போன்ற போட்டியாளர்கள், அதே பிரிவைப் பூர்த்தி செய்ய கேலக்ஸி ஏ 52 சாம்சங்கின் டிரம்ப் கார்டாக பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் 6.5 இன்ச் FHD + 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அதாவது முந்தைய தலைமுறை மாடலில் 60Hz உடன் ஒப்பிடும்போது வலைப்பக்கங்களும் வீடியோக்களும் வேகமாக திறக்கும். கேலக்ஸி ஏ 52, ஐபி 67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை பிரிவில் வேறு எந்த தொலைபேசிக்கு இந்த அம்சம் இல்லை. டால்பி அட்மோஸ் மேம்பாடுகளுடன் கேலக்ஸி ஏ 52-க்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் சாம்சங் கொண்டு வருகிறது.
கேலக்ஸி ஏ 52-ல் உள்ள கேமராக்களில் சாம்சங் அதிக கவனம் செலுத்தியது. இந்த சாதனம் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேலக்ஸி A52, 64MP OIS திறன் கொண்ட முதன்மை கேமரா, 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 5MP டெப்த் கேமரா மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.
கேலக்ஸி ஏ 52-ன் இரண்டு பதிப்புகளை சந்தையில் விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது. ஒன்று 5 ஜி மற்றும் மற்றொன்று எல்டிஇ இணைப்புடன். எல்.டி.இ-மட்டும் மாறுபாட்டில் 5 ஜி இல்லாததைத் தவிர, கேலக்ஸி ஏ 52 5 ஜி-யில் 120 ஹெர்ட்ஸ் திரைக்கு மாறாக 90 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. இந்த இரண்டு தொலைபேசிகளிலும் 4500 எம்ஏஎச் பேட்டரி, கேலக்ஸி ஸ்மார்ட் டேக்கிற்கான ஆதரவு, திரையில் கைரேகை ஸ்கேனர் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகியவை உள்ளன. இந்த சாதனங்கள் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ 72, எல்டிஇ-யையும் அறிவித்தது. இது, கேலக்ஸி ஏ 52 எல்டிஇ போலவே உள்ளது. ஆனால், சற்று பெரிய 6.7 இன்ச் திரை மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் வருகிறது. கேலக்ஸி ஏ 72-ல் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.