scorecardresearch

90HZ டிஸ்பிளே, 5000mAh பேட்டரி: சாம்சங் ஏ14 5ஜி ஸ்மார்ட் போன்; விலை மிகவும் குறைவு

சாம்சங் கேலக்சி ஏ14 4ஜி மற்றும் சாம்சங் ஏ14 5ஜி என இரண்டு வெர்ஷன் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Lava Agni 2 5G goes on first sale in India
லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை தொடங்கியுள்ளன.

சாம்சங் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனமாகும். உயர் ரக ஸ்மார்ட் போன், பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் எனப் பல்வேறு வகையில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப ஸ்மார்ட் போன் தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் ஏ14 வகை போன்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் 4ஜி, 5ஜி என 2 வெர்ஷன்களில் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏ14 வகை போன்கள் 3 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைட் கீரின், பிளேக், சில்வர் என 3 வண்ணங்களில் உள்ளது. சாம்சங் ஏ14 5ஜி வெர்ஷன் போன் 90HZ டிஸ்பிளே 5000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

அதேநேரம் 4ஜி வெர்ஷன் 6.6-இன்ச் FHD+ ஐபிஎஸ் எல்.சி.டி 60Hz டிஸ்பிளே கொண்டுள்ளது. இன்ஃபினிட்டி-வி ஸ்டைல் ​​நாட்ச் கொண்டுள்ளது. சாதனம் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI 5 கோர் 5.1 இல் இயங்குகிறது, மேலும் Galaxy A14 ஆனது ஆண்ட்ராய்டு 14 மற்றும் 15 புதுப்பிப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து நான்கு வருட பாதுகாப்பு இணைப்புகளுடன் கிடைக்கும் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

டிரிபிள் கேமரா 50 எம்பி ப்ரைமரி சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் உள்ளது. சாதனத்தில் 13 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது . 1080p வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய முடியும் என்றாலும், சாதனம் 4K வீடியோ பிளேபேக் திறன் கொண்டது.

சாம்சங் ஏ14 64ஜிபி/128 ஜிபி வேரியண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் ஏ14 5ஜி வெர்ஷன் ரூ.16,4999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Samsung galaxy a14 5g price specs