/indian-express-tamil/media/media_files/2025/09/01/samsung-galaxy-a17-5g-2025-09-01-12-23-32.jpg)
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஏ.ஐ. அம்சங்கள்... ரூ.18,999 விலையில் சாம்சங் கேலக்ஸி எ17 5G அறிமுகம்!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ17 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வரிசையில் இது ஏ.ஐ அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. சாம்சங்கின் பெரும்பாலான போன்களைப் போல இந்த மாடலும் எக்ஸினோஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இதில் மேம்படுத்தப்பட்ட ஓ.எஸ் அனுபவம், நீண்ட கால ஆதரவு மற்றும் ஜெமினி ஏ.ஐ. வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே கிடைக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ17 5G-யின் விலை விவரங்கள்:
6GB + 128GB மாடல்: ரூ.18,999
8GB + 128GB மாடல்: ரூ.20,499
8GB + 256GB மாடல்: ரூ.23,499
சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் இந்த போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கேலக்ஸி ஏ17 5G-யின் சிறப்பம்சங்கள்:
6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. எக்ஸினோஸ் 1330 சிப்செட், அதிகபட்சமாக 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டது. பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் 13MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
5,000mAh பேட்டரி, 25W சார்ஜிங் வேகத்துடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 உடன் வருகிறது. மேலும், 6 ஓஎஸ் அப்கிரேடுகள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும் என சாம்சங் உறுதியளித்துள்ளது. கூகுளின் AI தொகுப்பான ஜெமினி, சர்க்கிள் டு சர்ச் போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இந்த போன் 7.5 மிமீ தடிமன் மற்றும் 192 கிராம் எடை கொண்டது.
செப்டம்பரில் சாம்சங் கேலக்ஸி நிகழ்வு
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 அறிமுக நிகழ்வுக்கு ஒரு வாரம் முன்னதாக, சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி நிகழ்வை செப்டம்பர் மாதத்தில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் AI-அடிப்படையிலான புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் புதிய கேலக்ஸி போன் மற்றும் பிரீமியம் கேலக்ஸி டேப் S மாடல்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேலக்ஸி F25 FE மாடலும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.