Samsung Galaxy A7 India Launch : இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி A7 ஸ்மார்ட்போன் தென்கொரியாவில் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து இன்று இந்தியாவில் அறிமுகமானது இந்த ஸ்மார்ட்போன். வருகின்ற 27 மற்றும் 28ம் தேதி தன்னுடைய விற்பனையை ஃப்ளிப்கார்ட்டில் தொடங்க இருக்கிறது. சாம்சங் ஷோரூம்களிலும் இது விற்பனையாகி வருகிறது.
சாம்சங் கேலக்ஸி A7ன் ( Samsung Galaxy A7 சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த போனினை இயக்குகிறது எக்ஸினோஸ் 7885 ப்ராசஸ்ஸர் ஆகும். இது இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகிறது. 4GB RAM +64GB மற்றும் 6GB RAM + 128GB வேரியண்ட்டுகளில் வெளியாகிறது. இதன் சேமிப்புத் திறனை 512GB வரை உயர்த்திக் கொள்ளலாம்.
வடிவமைப்பு
சாம்சங் கேலக்ஸி A7, 7.5 மிமீ அளவு தடிமனுடன் உருவாக்கப்பட்ட இந்த போனில் ஃபிங்கர் ப்ரிண்ட் பவர் பட்டன், போனின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்பக்க பேனல் 2.5D க்ளாஸ் பேக்கினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கத்தில் கொரில்லா க்ளாஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. டோல்பி அட்மோஸ் 360 டிகிரி சர்ரௌண்ட் சவுண்டினை சப்போர்ட் செய்யும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கேமராக்கள்
இந்த போனின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் அது மூன்று ரியர் கேமராக்கள் தான். முதல் இரண்டு கேமராக்களின் திறன் என்பது 24MP+8MP தான். அல்ட்ரா வைட் ஆங்கிள் புகைப்படத்தினை எடுப்பதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பின்பக்க கேமரா 5MP திறன் கொண்டதாகும். இந்த டெப்த் சென்சிங் லென்ஸ்கள் f/2.2 அப்பேச்சரை கொண்டிருக்கிறது.
செல்பி கேமரா 24MP ஆகும். ஏ.ஆர் எமோஜியுடன் வருகிறது இந்த கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
விலை
128 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை ரூ. 28,900 மற்றும் 64 ஜிபி கொண்ட போனின் விலை ரூ. 23, 990 ஆகும். ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் கார்டுகள் மூலம் வாங்கப்படும் போன்களுக்கு 2000 ரூபாய் Cashback சலுகையினை தருகிறது ஃபிளிப்கார்ட்.
ஒன்ப்ளஸ் 6T, ஹானர் 10, ஹுவாய் நோவா 3 போன்ற போன்களுக்கு போட்டியாக அறிமுகமாகிறது இந்த மிட்-ரேஞ் பிரிமியம் போன்.