Samsung Galaxy A70s mid range smartphone specifications : சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் கேலக்ஸி ஏ70 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்தியாவில் வெளியாகும் முதல் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும். ப்ரிஸம் க்ரெஷ் ரெட், ப்ரிஷ்ம் க்ரெஷ் ப்ளாக் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்களில் மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகள் உள்ளன. 6ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 30,999 ஆகும். 8 ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.38,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நேற்று முதல் (28/09/2019) விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க : ரூ. 6,500-க்கு வெளியாகும் ரெட்மி 8ஏ… சிறப்பம்சங்கள் என்னென்ன?
Samsung Galaxy A70s mid range smartphone specifications
6.7 இன்ச் ஃபுல் எச்.டி + சூப்பர் ஏமோஎல்டி திரை கொண்டள்ளது. இதன் ரெசலியூசன் 2400 x 1080 பிக்சல்களாகும்.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசரும், அட்ரெனோ 612 கிராபிக்ஸ் ப்ரோசசரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய் 9.0 பை-ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் சொந்த ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இந்த ஸ்மார்ட்போன் செயல்படுகிறது.
4500 mAh கொண்டுள்ளாதால் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் மிக வேகமாகவும் சார்ஜ் செய்து கொள்ள இயலும்.
மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் 64ஜிபி கேமரா ஸ்மார்ட்போனாகும். 8 எம்.பி. அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சாரும் , 5ஜிபி மூன்றாம் கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் செல்ஃபி கேமராவின் செயற்திறன் 32 எம்.பி. ஆகும்.
மேலும் படிக்க : ரூ. 15 ஆயிரத்துக்கு வெளியாகும் எல்.ஜி.யின் க்யூ60 ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!