சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், 6.0 இன்ச் ஃபுல் ஹெச்டி + இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED 18:5:9 டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், 16 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, F/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.
இதன் டூயல் செல்ஃபி கேமராக்கள் குளோஸ்-அப், பேக்கிரவுண்டு, போர்டிரெயிட் மற்றும் லைவ் ஃபோகஸ் உள்ளிட்ட அம்சங்களிடையே மாற்றி கொள்ள வழி செய்வதோடு, புகைப்படங்களை எடுக்கும் முன்போ அல்லது எடுத்த பின்னரோ அவற்றில் பொக்கே எஃபெக்ட் சேர்க்கவும் வழி செய்கிறது.
இத்துடன் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 3500 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் சாம்சங் பே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
6.0 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர், மாலி-G71 GPU, 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், டூயல் சிம் ஸ்லாட், 16 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர், 16 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா f/1.9 அப்ரேச்சர், கைரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி (IP68), 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3500 எம்ஏஎச் பேட்டரி, அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
இந்தியாவில் இதன் விலை 32,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.