6481 ரூபாய் வரை எக்ஸ்சேஞ் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார்

இன்று முதல் அமேசானில் போனின் விற்பனை துவக்கம்...

சாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார் (Samsung Galaxy A8 Star) என்ற திறன்பேசி ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது சாம்சங் நிறுவனம்.  அதனுடைய விற்பனை இன்று அமேசான் இந்தியா இணைய தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார் (Samsung Galaxy A8 Star) சிறப்பம்சங்கள்

6.3 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளேவுடன் வரும் இந்த போனில் 6ஜிபி RAM சேமிப்புத்திறனும், இரட்டை பின்பக்க கேமராக்களும் இருக்கின்றன.

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன்.

இண்டெர்நெல் ஸ்டோரெஜ்ஜில் சுமார் 64ஜிபிக்கான டேட்டாவினை சேமித்துக் கொள்ளலாம். மேலும் மெமெரி கார்ட் மூலமாக 400 ஜிபி வரை சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ளலாம்.

குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 660 பிராசஸ்ஸர் இந்த போனில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Samsung Galaxy A8 Star கேமரா சிறப்பம்சங்கள்

16MP + 24MP என இரட்டை பின்பக்கக் கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். அதில் டூயல் ரியர் இண்டெல்லிகேம் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 24MP செல்பிக் கேமராவினையும் கொண்டிருக்கிறது இந்த போன்.

அமேசான் தரும் சிறப்புச் சலுகைகள்

அமேசான் எக்ஸ்க்லூஸ்வாக இன்று விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸ் A8 ஸ்டார். சீனாவில் இந்த போன் ஏற்கவே விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களில் லேட்டஸ்ட் போனை 6481 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாய் இந்த போனை வாங்கும் வசதியினை அமேசான் உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும் எச்.டி.எஃப்.சி க்ரெடிட் கார்டினை வைத்து 5% காஷ்பேக்கினை பெற்றுக் கொள்ளலாம்.  பஜாஜ் பின்செர்வ் மூலமாகவும் No Cost EMI யில் இந்த திறன்பேசியை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close