Samsung Galaxy A90, Galaxy A40, Galaxy A20e : கேலக்ஸி ஏ சிரியஸ்ஸில் மூன்று புதிய போன்களை அறிமுகம் செய்ய உள்ளது அந்நிறுவனம். அந்நிறுவனத்தின் இங்கிலாந்து இணைய தளம் சாம்சங் கேலக்ஸி A90, கேலக்ஸி A40 மற்றும் கேலக்ஸி A20e ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தினை உறுதி செய்துள்ளன.
Samsung Galaxy A90, Galaxy A40, Galaxy A20e
நெதர்லாந்தைச் சேர்ந்த கேலக்ஸி க்ளப் சாம்சங்கின் புதிய போன்கள் பற்றிய புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி A90
ஏ90 ஸ்மார்ட் போன் பாப் அப் செல்ஃபி கேமராவுடனும், நோட்ச் அல்லது ஹோல் இல்லாத திரையுடனும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6ஜிபி ரேம் மற்றும் 128 இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களாக மக்கள் கைக்கு இவை கிடைக்கும்.
கேலக்ஸி ஏ9 போனின் தொடர்ச்சியாக ஏ90 ஸ்மார்ட்போன் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி A40
கேலக்ஸி ஏ40 போனின் விலை பற்றிய தகவல்களும் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளன. இதன் விலை ரூ.20,000.
6.4 இன்ச் ஃபுல் எச்.டி + இன்ஃபினிட்டி - யூ சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையுடன் வருகிறது.
ரெசலியூசன் 2340×1080 பிக்சல்களாகும்
எக்ஸினோஸ் 7904 ப்ரோசசர் மற்றும் Mali-G71 MP2 கிராஃபிக்ஸ் ப்ரோசசிங் யூனிட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சாம்சங் ப்ரீமியம் போன் கேலக்ஸ் எஸ்10+ எப்படி இருக்கிறது ?