Advertisment

இத்தனை சிறப்பம்சங்களுடன் வெளியாகிறதா சாம்சங்கின் கேலக்ஸி ஏ90?

3700mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 25 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Summer Sale

Amazon Summer Sale

Samsung Galaxy A90 : ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது சாம்சங் கேலக்ஸியின் ஏ90 ஸ்மார்ட்போன். இந்நிலையில் இந்த போன் குறித்த சிறப்பம்சங்கள், விலை ஆகியவை குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ஏ கேலக்ஸி ஈவண்ட் A Galaxy Event என்ற பெயரில் பெங்காங்க், மிலன், மற்றும் சன் பௌலோ ஆகிய மூன்று நகரங்களில் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடப்படுகிறது.

Advertisment

போனின் அறிமுக விழாவை எப்படி பார்ப்பது ?

இந்த மூன்று நகரங்களில் நடைபெறும் வெளியீட்டு விழாவினை வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த தளங்கள் வாயிலாக லைவில் பார்த்துக் கொள்ளலாம்.  http://www.samsungmobilepress.com, news.samsung.com/global, அல்லது http://www.samsung.com/galaxy

விலை

இது ஒரு மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. ஒன்ப்ளஸ் போனின் 6இ ப்ரீமியம் போனை கூட இந்த விலையில் வாங்கி விடலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இந்த போனின் விலை தோராயமாக 35 ஆயிரத்தில் துவங்கி 40 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy A90 சிறப்பம்சங்கள்

பெசெல் வித் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் திரையைக் கொண்டுள்ளது இந்த போன்.

இதன் அளவு 6.7 இன்ச் ஆகும்.

ஃபுல் எச்.டி. ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இன் - டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் சிப்செட் (codenamed SDM7150) இதில் பொருத்தப்பட்டுள்ளது.

3700mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 25 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமரா

சாம்சங் நிறுவனத்தின் முதல் 48 எம்.பி. கேமரா போனாக இது உள்ளது. பாப் அப் செல்ஃபி கேமராவையும் இந்த போன் பெற்றுள்ளது.

மேலும் படிக்க : மீண்டும் ஒரு குட்டி ஐபோனை வழங்கி ஆச்சரியப்படுத்த இருக்கும் ஆப்பிள் நிறுவனம்

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment