லோ பட்ஜெட்; ஆனா ப்ரீமியம் ஆடியோ குவாலிட்டி! சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி பட்ஸ் கோர் (Samsung Galaxy Buds Core) வயர்லெஸ் இயர்பட்களை இந்தியாவில் ஜூன் 27 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இவை, சாம்சங்கின் பட்ஜெட் விலை இயர்பட்களாகும்.

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி பட்ஸ் கோர் (Samsung Galaxy Buds Core) வயர்லெஸ் இயர்பட்களை இந்தியாவில் ஜூன் 27 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இவை, சாம்சங்கின் பட்ஜெட் விலை இயர்பட்களாகும்.

author-image
WebDesk
New Update
Samsung Galaxy Buds Core

லோ பட்ஜெட்; ஆனா ப்ரீமியம் ஆடியோ குவாலிட்டி! சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்களான கேலக்ஸி பட்ஸ்கோர் (SamsungGalaxyBudsCore)-ஐ இந்திய சந்தையில் ஜூன் 27 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த இயர்பட்கள், அதிநவீன அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுக விலை ரூ.4,999 ஆகும்.

Advertisment

பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்கள்:

குறைந்த விலையில் இருந்தாலும், கேலக்ஸி பட்ஸ் கோர் வழங்கும் அம்சங்கள் சாம்சங்கின் தரத்தை பிரதிபலிக்கின்றன. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சம், சுற்றியுள்ள தேவையற்ற சத்தங்களை நீக்கி, இசையைத் தெளிவுடனும், அழைப்புகளைத் துல்லியமாகவும் கேட்க உதவுகிறது. பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 35 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் (ANC அணைக்கப்பட்டிருந்தால்). ANC பயன்படுத்தப்படும்போதுகூட 20 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும் என்பதால், நீண்ட பயணங்களுக்கும், நாள் முழுவதும் பயன்பாட்டிற்கும் ஏற்றவை.

சாம்சங்கின் இந்த புதிய இயர்பட்கள், Galaxy AI உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது நிகழ்நேர மொழிபெயர்ப்பு வசதியை வழங்குகிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நபர்களுடன் தடையின்றி உரையாட விரும்புபவர்களுக்கு புரட்சிகரமான அம்சமாக இருக்கும். அழைப்புகளின் தரத்தை மேம்படுத்த, கேலக்ஸி பட்ஸ் கோரில் 3 மைக்ரோஃபோன் அமைப்பு உள்ளது. இது தெளிவான குரல் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது.

Advertisment
Advertisements

ப்ளூடூத் 5.4 இணைப்பைக் கொண்ட இயர்பட்கள், காதுகளில் வசதியாகப் பொருந்தும் வகையில் விங்டிப் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நீண்ட நேரம் பயன்படுத்தும் போதும் சௌகரியத்தை உறுதி செய்கிறது. மேலும், IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளதால், வியர்வை மற்றும் லேசான நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. சாம்சங் சாதனங்களுக்கு இடையில் தடையின்றி மாறக்கூடிய மல்டி-டிவைஸ் இணைப்பு வசதி யும் இதில் உள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை என 2 வண்ணங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர், ஜூன் 27 முதல் Samsung.com, Amazon மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. குறைந்த விலையில் பிரீமியம் அம்சங்களை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு Samsung Galaxy Buds Core ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: