சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போனான சாம்சங் கேலக்ஸி F ஃபோல்டபிள் (Samsung Galaxy F foldable Phone) போனின் சிறப்பம்சங்களை தற்போது வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம்.
உலகின் முதல் ஃபோல்டபிள் போனான இந்த ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பேட்டரிகள் மற்றும் இரண்டு கேமராக்கள் (12MP) இதில் பொருத்தப்பட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப இணையதளமான LetsGoDigital இணையதளம் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
Samsung Galaxy F foldable Phone வெளியீடு
சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில், நவம்பர் மாதம் நடைபெற்ற சாம்சங் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபிரன்ஸ்ஸில் இந்த போன் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சிலர் இந்த போனை கேலக்ஸி எக்ஸ் என்றும் அழைத்து வந்தார்கள்.
சாம்சங்கைத் தொடர்ந்து அடுத்த வருடம் 2020ம் ஆண்டு ஹவாய், எல்.ஜி, ஓப்போ, சியோமி, விவோ, மோட்டோ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களும் இந்த வகையான போன்களை வெளியிட உள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் கேலக்ஸி S 10 சீரியஸ் போன்களுடன் இந்த போனையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சாம்சங்.
மேலும் படிக்க : 9000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் சாம்சங் கேலக்ஸி நோட் 9ன் புதிய போன்…
Samsung Galaxy F foldable Phone சிறப்பம்சங்கள்
Samsung Galaxy F foldable போனில் 2 பேட்டரிகள் பொறுத்தப்பட்டுள்ளன. 5000 - 6000 mAh சேமிப்புத் திறன் கொண்ட இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 12 MP + 12 MP என இரட்டை பின்பக்க கேமராக்களும், 8 எம்.பி. செல்பி கேமராவும் இதில் பயன்படுத்தப்படுள்ளது.
Exynos 9820 அல்லது Snapdragon 855 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8ஜிபி RAM மற்றும் 128 இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
2019ம் ஆண்டில் 4 மில்லியன் போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
39 மில்லியன் என்ற நிலையை 2022ம் ஆண்டில் எட்ட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.