சாம்சங், முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாகும். ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள், இயர் போன், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களையும் சாம்சங் நிறுவனம் தயாரித்து வருகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் முதல் உயர் தர ஸ்மார்ட்போன்கள் வரை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் பட்ஜெட் பயனர்களைக் கவரும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் தயாரித்து உள்ளது. சாம்சங் இந்தியாவில் தனது முதல் F சீரிஸ் போனான F14 மாடல் போனை மார்ச் 24-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இது 5ஜி ஆதரவு போனாகும். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பட்ஜெட் விலை போன் பயனர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy F14 5ஜி சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்சி F14 போன் 6,000mAh பேட்டரி உடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது 5nm Exynos 1330 SoC கொண்டு அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் ரேம் பிளஸ் அம்சமும் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் கூடுதல் ஸ்டோரேஜ் வசதியைப் பெற முடியும். Samsung Galaxy F14 டிஸ்ப்ளே 6.6 இன்ச் full HD+ மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. 50 MP+ 2 MP பேக் கேமரா வசதி கொண்டுள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OneUI 5.0 மூலம் இயக்கப்படுகிறது. 4 ஆண்டுகள் security updates, 2 ஆண்டுகள் OS அப்டேட் வசதி வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்சி F14 5ஜி ஆதரவு போன் 6ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.17,999 எனக் கூறப்பட்டுள்ளது,
இருப்பினும் இது விற்பனை தளங்களில் ரூ.14,000- ரூ.15,000 விலையில் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்சி F14 போன் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/