எக்கச்சக்க ஏ.ஐ. அம்சங்கள்.... ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன்!

அண்மையில் கேலக்ஸி M36 5G அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் கேலக்ஸி M36 5G அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Galaxy F36 5G

எக்கச்சக்க ஏ.ஐ. அம்சங்கள்.... ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன்!

அண்மையில் கேலக்ஸி M36 5G அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் இந்தப் போனின் விளம்பரப் பக்கம் வெளியாகி, சில முக்கிய அம்சங்கள், வடிவமைப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Advertisment

சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் வழியாகக் கிடைக்கும். இதற்கான விளம்பரங்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் நேரலையில் உள்ளன. இந்தப் போனின் சரியான அறிமுகத் தேதி அல்லது விலை விவரங்களை சாம்சங் இதுவரை வெளியிடவில்லை. தகவல்களின்படி, இதன் 6GB RAM/128GB மாடல் ரூ.14,999 முதல் ரூ.17,999 வரையிலும், 8GB RAM/128GB மாடல் ரூ.16,999 முதல் ரூ.19,999 வரையிலும் விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:

  • AI அம்சங்கள்: இந்த போனின் விளம்பரத்தில் "Flex HI-FAI" என்ற டேக்லைன் உள்ளது, இதில் "AI" எழுத்துக்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இது கேலக்ஸி F36 5G-ல் சில செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் (AI NightShot) இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

  • சிப்செட், செயல்திறன்: இந்த ஸ்மார்ட்போன் Exynos 1380 SoC மூலம் இயக்கப்படும் என கூகிள் பிளே கன்சோல் பட்டியல் உறுதிப்படுத்தி உள்ளது. 6GB RAM (அ) 8GB RAM உடன் இணைக்கப்படலாம். இது அன்றாடப் பயன்பாடுகளுக்கும், ஓரளவுக்கு கேமிங்கிற்கும் போதுமான செயல்திறனை வழங்கும்.

  • டிஸ்பிளே: கேலக்ஸி F36 5G டேர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். 1,080x2,340 பிக்சல் தெளிவுத்திறன், 450ppi பிக்சல் அடர்த்தியுடன் வரலாம். மேலும் 120Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில் மெல்லிய, செங்குத்தாக அடுக்கப்பட்ட கேமரா அமைப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

  • இயங்குதளம்: இந்த போன் Android 15 இயங்குதளத்தில், One UI 7 உடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் தனது போன்களுக்கு நீண்டகால OS மேம்படுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதால், F36 5G-க்கும் இது பொருந்தும்.

  • பேட்டரி: M36 5G போனில் 5,000mAh பேட்டரி இருந்த நிலையில், F36 5G-ல் சற்று மேம்படுத்தப்பட்ட பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்கள் 6000mAh பேட்டரியைக் கூட சுட்டிக்காட்டுகின்றன.

  • கேமரா: 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன் OIS (Optical Image Stabilization) ஆதரவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: