Advertisment

கொரில்லா கிளாஸ், 108 பிக்ஸல் கேமரா: குறைந்த விலை; அட்டகாசமான சாம்சங் எஃப் 54 5ஜி போன் அறிமுகம்

ரூ.30.000க்கும் குறைவான விலையில் சாம்சங் கேலக்ஸி எஃப் 54 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy F54 5G

Samsung Galaxy F54 5G launched in India

சாம்சங் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. குறைந்த விலை, பட்ஜெட் விலை மற்றும் விலையுயர்ந்த போன்களை விற்பனை செய்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

Advertisment

அந்த வகையில் இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 5ஜி போன்கள் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சாம்சங் பட்ஜெட் விலையில் 5ஜி போன் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 54 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 54 5ஜி போன் அறிமுகம் செய்துள்ளது. 120Hz ரீபிரஸ் ரேட்டுடன் வரும் இந்த போன்
6.7 இன்ச் டிஸ்பிளே கொண்டது. ஃபுல் HD+ தெளிவுத்திறனில் இயங்கும் இந்த போன் AMOLED பேனலை வழங்குகிறது. எஃப் 54 போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கோட்டிங் வசதியுடன் வருகிறது. இது போன் டேமேஜில் இருந்து பாதுகாக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 54 நிறுவனத்தின் தயாரிப்பான Exynos 1380 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே போல் ஆண்ட்ராய்டு 13 OS மற்றும் 4 வருட ஆண்ட்ராய்டு OS அப்கேடுகளை வழங்குகிறது. 5 வருடம் பாதுகாப்பு இணைப்புகளை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

கேமரா, பேட்டரி

இந்த போன் ட்ரிபிள் கேமரா வசதி கொண்டது. வீடியோக்களுக்கான OIS ஆதரவுடன் 108 மெகாபிக்ஸல் ப்ரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் ஆகியவை வழங்குகிறது. அதோடு முன்பக்கத்தில் செல்ஃபி கேமரா 32 மெகாபிக்ஸல் சென்சார் உள்ளது.

நீண்ட நேரம் பேட்டரி லைவ் வழங்கும் 6,000mAh பேட்டரியை இந்த போன் கொண்டுள்ளது. 1 நாள் முழுக்கும் பேட்டரி லைவ் வழங்கும். 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

சார்ஜர் இல்லை

இருப்பினும் இந்த போன் பேக்குடன் சார்ஜர் வழங்கப்படாது. அதோடு போன் case-ம் வழங்கப்படவில்லை.

விலை

சாம்சங் எஃப் 54 5ஜி போனானது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.27,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ ஆர்டர் செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology Smartphone Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment