/tamil-ie/media/media_files/uploads/2020/01/Galaxy-Fold-main.jpg)
Samsung Galaxy Fold 2019
Samsung Galaxy Fold 2019 :2 ஆயிரம் டாலர்கள் விலையில் ஒரு ஸ்மார்ட்போனா என்று பலரும் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினாலும் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்ட். லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. கோஹ் இது குறித்து கூறுகையில் கடந்த ஆண்டில் சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகமான விலையாக இருந்தாலும், இது போன்ற மிகவும் வித்தியாசமான தொழில்நுட்பத்திற்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதையே இது வெளிப்படையாக காட்டுகிறது. ஆரம்பத்தில் 1 மில்லியன் யூனிட்டுகளை விற்றுத் தீர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தோடு இந்த ஸ்மார்ட்போன் களம் இறக்கப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,64,999 ஆகும். வர்த்தக ரீதியாக உலகில் வெளியான முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் இது தான்.
சாதாரண நிலையில் இந்த ஸ்மார்ட்போன் 4.6 இன்ச் அளவில் இருக்கும். இரண்டாக விரிக்கும் போது 7.3 இன்ச் ஸ்க்ரீன் கொண்ட டேப்ளெட்டாக இது இயங்கும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய சாம்சங் யோசனை செய்து வருகிறது. இதன் விலை 850 டாலருக்குள் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க :Best of CES 2020: சாம்சங் Sero ‘டூ’ எல்ஜியின் OLED 8K டிவி வரை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.