வெளியானது உலகின் முதல் ஃபோல்டபிள் போன்... விலை என்ன தெரியுமா?

விற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த போனின் விலை 1980 அமெரிக்க டாலர்களாகும்.

Nandagopalan Rajan

Samsung Galaxy Fold Features :  சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்ட் 2019 என்ற நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. சாம்சங் எஸ் சீரியஸ் வெளியாகத் துவங்கி சுமார் 10 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் விதத்தில் மிக பிரம்மாண்டமாக சான் பிரான்சிகோவில் அமைந்திருக்கும் பில் க்ராஹம் அரங்கில் இன்று நடைபெற்றுவருகிறது.

1977-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளை அறிமுகப்படுத்திய அதே அரங்கில் தான் இந்த போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே அரங்கில் சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி ஃபோல்ட் என்ற ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங்க்.

7.3 அங்குல டேப்லட் மடக்கு ஸ்மார்ட்போனாக செயல்படும். ஒரு ஸ்கிரீனிலிருந்து மற்றொரு ஸ்கீரினை மிகவும் வெற்றிகரமாக இயக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற எஸ் 10 போன்களின் அறிமுக விழாவில் முக்கிய கவனத்தை ஈர்த்தது இந்த போன். 2 பில்லியன் டிவைஸ்கள் இது வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : அறிமுகமானது சாம்சங்கின் S10 போன்கள்… எப்போது விற்பனைக்கு வருகிறது?

Samsung Galaxy Fold Features and specifications

உள்பக்கம் 7.3 இன்ச் QXGA+ திரை

4.6இன்ச் HD+ திரை வெளிப்பக்கம் (21:9 aspect ratio)

இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது

7nm ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

12ஜிபி ரேம் / 512 ஜிபி ஸ்டோரேஜ்

வையர்லெஸ் பவர்ஷேர்

மூன்று வெளிப்புற கேமராக்களையும் மூன்று உள்பக்க கேமராக்களையும் உள்ளடக்கியது இந்த போன்

சாம்சங் ஒன்UI இண்டெர்ஃபேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது

விற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த போனின் விலை 1980 அமெரிக்க டாலர்களாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close