Samsung Galaxy Fold India launch: வெகுநாள் காத்திருப்பை முடித்துக் கொள்ள தயாராகுங்கள் சாம்சங் ரசிகர்களே. இந்த வருடத்தின் துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் உலகின் முதல் மடக்கு போனான சாம்சங் கேலக்ஸி ஃபோல்டினை அறிமுகம் செய்தது. செப்டம்பர் 27ம் தேதி முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் மாதம் 1ம் தேதி அறிமுகமாகிறது. கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் இந்த போனை இந்தியாவிலேயே உருவாக்க திட்டமிட்டுள்ளது என்பதுதான்.
இதுவரை வெளியான லீக்ஸ் மற்றும் ரிப்போர்ட்களில் இந்த போனின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே விலைக்கும் விற்பனையாகலாம். அல்லது அதற்கு சற்றே கூடுதலாகவும், குறைவாகவும் இந்த போன் விறபனைக்கு வரும். 24 மணி நேரமும் செயல்படும் வாடிக்கையாளர்கள் சேவை மையம் இந்த ஒரு ஸ்மார்ட்போனுக்காகவே இந்தியாவில் உருவாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Samsung Galaxy Fold சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனை இரண்டாக மடிக்கும் போது 4.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். முழு வடிவமைப்பில் 7.3 இன்ச் அளவை கொண்டிருக்கும்.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855வை கொண்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 16 எம்.பி. அல்ட்ரா வைட் சென்சார், 12 எம்.பி. வைட் சென்சார் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்பக்க கேமரா என்று வரும் போது 10 எம்.பி. முதன்மை கேமராவும், 8 எம்.பி. டெப்த் சென்சாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 10 எம்பி செல்ஃபி கேமராவும் இதில் பயன்பாட்டில் உள்ளது.