Samsung Galaxy M Series Smartphones Price : ஜனவரி 28ம் தேதி வெளியாகிறது சாம்சங் எம் சிரியஸ்ஸின் இரண்டு புதிய போன்கள். M10 போனின் விலை ரூ. 7,990 மட்டுமே. M20 போனின் விலை ரூ. 10,990 ஆகும்.
ஜனவரி 28ம் தேதி இந்த போன் அறிமுகமானாலும், மார்ச் மாதம் 5ம் தேதி தான் அமேசான் இணையத்திலும், சாம்சங் இணையத்திலும் விற்பனைக்கு வருகிறது.
நொய்டாவில் இருக்கும் சாம்சங்கின் மிகப்பெரிய மொபைல் ஃபேக்டரியில் இந்த இரண்டு போன்களின் தயாரிப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றது.
Samsung Galaxy M Series Smartphones Price - சிறப்பம்சங்கள்
இன்ஃபினிட்டி வி ஸ்டைல் நோட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது இந்த போன்
ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி உதவியுடன் மூன்று மடங்கு விரைவாக உங்களின் போனை சார்ஜ் செய்யலாம்
Samsung Galaxy M20 Price
சாம்சங் கேலக்ஸி M20 போனின் பேட்டரி பேக்கப் 5,000mAh
6.13 இன்ச் எல்.சி.டி ஃபுல் எச்.டி திரை கொண்டுள்ளது இந்த போன். பின்பக்க கேமராக்கள் 13 MP மற்றும் 5 MP செயல் திறன் கொண்டுள்ளது.
செல்ஃபி கேமராவின் செயல் திறன் 8 MP ஆகும்.
சாம்சங்கின் சொந்த ப்ரோசசரான எக்ஸினோஸ் 7885 பயன்படுத்தப்பட்டுள்ளது. Mali-G71 MP2 கிராபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த போன்.
ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன்.
Samsung Galaxy M10 Price
சாம்சங் கேலக்ஸி M10 போனின் பேட்டரி பேக்கப் 3,500mAh
இன்ஃபினிட்டி – வி ஸ்டைல் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது இந்த போன். இதன் அளவு 6.5 இன்ச் ஆகும். எக்ஸினோஸ் 7870 ப்ரோசசரும் மலி-டி830 கிராபிக்ஸ் ப்ரோசசர் யூனிட்.
3ஜி ரேம்முடன் கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வருகிறது இந்த போன்.
ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன். 3400mAh பேட்டரியுடன் வெளியாகிறது.
13 எம்பி மற்றும் 5 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது இந்த போன்
மேலும் படிக்க : இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஆப்பிளின் புதிய போன்