2019ம் ஆண்டிற்கான முதல் அறிவிப்பை வெளியிட்டது சாம்சங்… வெளிவர இருக்கும் போன் என்ன ?

சாம்சங் கேலக்ஸி எம்10 : 3400mAh பேட்டரியுடன் வெளியாகிறது. 13 எம்பி மற்றும் 5 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது இந்த போன்.

Samsung Galaxy M Series
Samsung Galaxy M Series

Samsung Galaxy M series India launch : இந்த வருடத்திற்கான முதல் அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த வருடத்தின் தொடக்கத்திலே எம் – சிரியஸ்ஸில் போன்கள் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறது சாம்சங்.

சாம்சங் எம் சிரியஸ்ஸில் எம்10, எம்20, எம் 30, மற்றும் எம்40 போன்கள், ஏற்கனவே வெளியாகி இருக்கும் கேலக்ஸி ஆன் சீரியஸ்ஸிற்கு மாற்றாக வரப் போகிறது. இதற்கான சான்றிதழ்களைப் பெற அமெரிக்க டெலிகம்யூனிகேசன்ஸிடம் ஆவணம் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த சீரியஸில் வரும் மூன்று போன்கள் Galaxy M10, Galaxy M20 and M30 இந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே எம் சிரியஸ்களில் உருவாக்கப்படும், எம்10, எம்20, எம்30 போன்களை சில இடங்களில் எம்2, எம்3 என்றும் அழைக்கின்றார்கள்.

Samsung Galaxy M series : Samsung Galaxy M3 or M30

4ஜிபி ரேமுடன் கூடிய இந்த போன்கள் 64ஜிபி மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுகளுடன் வெளியாக உள்ளது.

ப்ரோசசர் எக்ஸினோஸ் 7885 பொருத்தப்பட்டிருக்கிறது

மாடல் நம்பர் – SM-M305F

Samsung Galaxy M series : The Galaxy M2 or M20

இது ஒரு எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் மாடல் எண் SM-M205F. இதன் ரெசலியூசன் 2340×1080 பிக்சல்கள் ஆகும்.

ஸ்கிரீன் அஸ்பெக்ட் ரேசியோ 19.5:9 ஆகும். பிராசசர் எக்ஸினோஸ் 7885 பயன்படுத்தப்பட்டுள்ளது. Mali-G71 MP2 கிராபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த போன்.  ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன்.

இந்த இரண்டு போன்களும் எல்.சி.டி டிஸ்பிளே திரைகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு போன்களும் இரட்டை சிம்கார்ட்கள் பொருத்தும் வசதியுடன் வருகிறது. எம்20 போன்கள் 32ஜிபி/64ஜிபி வேரியண்ட்டுகளுடன் வரும். 64ஜிபி/128ஜிபி வேரியண்ட்டுகளுடன் எம்30 போன்கள் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க : இனிமேல் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் – ட்ராய் புதிய சட்டம்

Samsung Galaxy M series – சாம்சங் கேலக்ஸி எம்10

இன்ஃபினிட்டி – வி ஸ்டைல் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது இந்த போன். இதன் அளவு 6.5 இன்ச் ஆகும். எக்ஸினோஸ் 7870 ப்ரோசசரும் மலி-டி830 கிராபிக்ஸ் ப்ரோசசர் யூனிட்.

3ஜி ரேம்முடன் கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வருகிறது இந்த போன். ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன். 3400mAh பேட்டரியுடன் வெளியாகிறது. 13 எம்பி மற்றும் 5 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது இந்த போன்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samsung galaxy m series to launch in january 2019 everything we know so far

Next Story
ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்… “ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்” ஸ்மார்ட்போன்!sharp
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express