/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-28T135050.927.jpg)
Samsung Galaxy M01 Core Tamil News
Samsung Galaxy M01 Core Tamil News: சாம்சங் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஆபரேடிங் சிஸ்டத்துடன் கூடிய சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 ஜிபி ராம் / 16 ஜிபி ஸ்டோரேஜ் போனின் விலை ரூ.5,499 ஆகவும், 1 ஜிபி ராம் / 16 ஜிபி ஸ்டோரேஜ் போனின் விலை ரூ.5,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ம் தேதி முதல் முன்னணி ஆன்லைன் ஸ்டோர்கள், சாம்சங் இந்தியா இ-ஸ்டோர் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும் என்றும் பிளாக்,புளு மற்றும் ரெட் கலர்களில் போன்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க உள்ளன.
இந்தோனேஷியாவில் கேலக்ஸி ஏ01 கோர் என்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட்போனே, இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி எம் 01 என்ற பெயரில் அறிமுகப்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இதன் விலை ரூபியா 1,099,000 (இந்திய மதிப்பில் ரூ.5,600) ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Samsung Galaxy M01 Core: Specifications
சாம்சங் கேலக்ஸி எம் 01 கோர் ஸ்போர்ட்ஸ் போனில், 5.3 இஞ்ச் ஹெச்டி மற்றும் டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. மீடியாடெக் 6739 புராசசர் மற்றும் பவர்வீஆர் ஜிஇ8100 ஜிபியு உள்ளது,.1GB/2GB of RAM உடன் 16GB/32GB ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கூகுளின் ஆண்ட்ராய்ட் கோ ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. 3 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, சிங்கிள் சார்ஜில் 11 மணிநேரம் நீடித்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனில், 8எம்பி சிங்கிள் கேமரா வித் எல்இடி பிளாஷ் உடன் உள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி சென்சார் செல்பி கேமரா உள்ளது.
ஸ்மார்ட்போன்களில் உள்ள அத்தனை அம்சங்களும் இந்த போனிலும் உள்ளது. இந்த போன் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும்.
இந்த போன், அனைவருக்கும் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கப்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த டிசைன், நல்ல செயல்திறன் பார்ப்பதற்கு கண்ணை கவரும் அமைப்பு உள்ளிட்டவை இந்திய மக்களிடையே இந்த போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று சாம்சங் இந்தியா மொபைல் வர்த்தக பிரிவு இயக்குனர் ஆதித்யா பாப்பர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.