சாம்சங் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன்கள் டிச.9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிமுகமாகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரத்துக்குள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்கள் 128GB வரையிலான ஆன்-போர்டு சேமிப்பகத்துடன் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் இரண்டு வருட OS மேம்படுத்தல்களை உறுதியளிக்கிறது.
தொடர்ந்து, சாம்சங்கின் ரேம் பிளஸ் விர்ச்சுவல் மெமரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Galaxy M04 8ஜிபி வரை ரேம் கொண்டு வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது
முன்பக்கத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச். ஃபோனைப் பார்க்கும்போது கைரேகை ரீடர் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.
இது வெளியீட்டுக்கு பின்னர் உறுதியாக தெரியவரும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் உள்ளன, இருப்பினும் அவற்றின் தெளிவுத்திறன் மற்றும் லென்ஸ் வகை தற்போதுவரை வெளியாகவில்லை.
Galaxy M-series போன்கள் பெரிய பேட்டரிகளுக்கு பெயர் பெற்றவை. ஆகையால், M04 இல் 5,000mAh பேட்டரி இருக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசானில் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/