சாம்சங் முன்னணி ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர், டேப், இயர் போன் உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஸ்மார்ட் போன்களைப் பொருத்தவரை உயர்தர போன்கள் முதல் பட்ஜெட் விலை போன்கள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ஸ்மார்ட் போன் தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது
பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட் போன் நாளை (ஏப்ரல் 17) அறிமுகம் செய்யப்படுகிறது.
ட்ரீப்பிள் கேமரா செட்அப், 6000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி என இளைஞர்களை கவரும் வகையில் சிறப்பம்சங்கள் உள்ளன. கேலக்ஸி எம்14 முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எம்14 Android 13 OS- அடிப்படையிலான OneUI 5 மூலம் இயங்கும். ப்ரைமரி கேமரா f/1.8 aperture கொண்டிருக்கும். Galaxy M14 ஆனது 5nm Exynos 1330 ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. Galaxy M13 முந்தைய பதிப்பை விட
Galaxy M14 அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது.
USB Type-C போர்ட் மூலம் சார்ஜ் செய்யப்படும் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட் போன் 6,000 mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
Galaxy F14 ஸ்மார்ட் போனை விட இது சில மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இது ட்ரீப்பிள் கேமரா அமைப்பு கொண்டுள்ளது. Galaxy M14 ரூ.13,999-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது Galaxy F14-ஐ விட சற்று குறைந்த விலையாக இருக்கும். Galaxy F14 ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.14,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. Galaxy M14 அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil