5000mAh பேட்டரி, 50MP கேமரா... ஏ.ஐ. அம்சங்களுடன் அக்.10-ல் களமிறங்கும் கேலக்ஸி எம்17 5G!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்-17 5G ஸ்மார்ட்போனை அக்.10 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது Moonlight Silver, Sapphire Black ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும்.

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்-17 5G ஸ்மார்ட்போனை அக்.10 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது Moonlight Silver, Sapphire Black ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
Galaxy M17 5G

5000mAh பேட்டரி, 50MP கேமரா... ஏ.ஐ. அம்சங்களுடன் அக்.10-ல் களமிறங்கும் கேலக்ஸி எம்17 5G!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்.17 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்.10 அன்று அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து சாம்சங் சில தகவல்களை உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisment

கேமரா அமைப்பு: இந்த ஸ்மார்ட்போன் 50MP முதன்மை சென்சார் கொண்ட ட்ரிபிள்-கேமரா (Triple-Camera) அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் முதன்மை கேமரா, அசைவினால் ஏற்படும் மங்கலை (Motion blur) மற்றும் நடுங்கும் வீடியோக்களைக் குறைக்கக்கூடிய Optical Image Stabilisation (OIS) அம்சத்தைக் கொண்டிருக்கும். மேலும், இது வெளிச்சம் (Exposure) மற்றும் வண்ணத்தை (Colour) மேம்படுத்தக்கூடிய AI மேம்பாடுகளையும் வழங்கும்.

டிஸ்பிளே: கேலக்ஸி எம்.17 5G ஆனது 6.7-இன்ச் சூப்பர் AMOLED (Super AMOLED) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். திரை பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7.5 மிமீ மெலிதான பக்கவாட்டுத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் தெளிப்பிலிருந்து (Dust and splash resistance) பாதுகாக்கும் IP54 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

ஏ.ஐ. அம்சங்கள்: இந்த சீரிஸில் முதன்முறையாக, M17 5G ஆனது நேட்டிவ் ஏ.ஐ. (Native AI) அம்சங்களை கொண்டிருக்கும் என சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் கூகிளின் சைகை அடிப்படையிலான 'Circle to Search' மற்றும் 'Gemini Live' போன்ற அம்சங்களை அணுகும் வசதியும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் (Moonlight Silver), சஃபையர் பிளாக் (Sapphire Black) ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும்.

Advertisment
Advertisements

சாம்சங் இதுவரை ஸ்மார்ட்போனின் பிராசஸர் குறித்து உறுதிப்படுத்தவில்லை என்றாலும், FoneArena அறிக்கையின்படி, இது சாம்சங்கின் Exynos 1330 சிப்ஸெட்டை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. முந்தைய மாடலான M16 5G-ல் MediaTek Dimensity 6300 சிப் பயன்படுத்தப்பட்டிருந்தது. Galaxy M17-லும் அதன் முந்தைய மாடலைப் போலவே 5,000mAh பேட்டரி இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட One UI 7 இருக்கும். M17 5G-ன் விலை மற்றும் பிற முழு விவரங்கள் அக்.10 அன்று அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது தெரிய வரும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: