Samsung Galaxy M30s Smartphone specifications, price, review, availability : சாம்சங் நிறுவனம் எம் சீரியஸில் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. தற்போது அந்த சீரியஸில் எம்30எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. ஆரம்ப விலை ரூ. 13,999 ஆகும்.
Samsung Galaxy M30s Smartphone specifications, price, review, availability
இந்த மிட்ரேஞ் ஸ்மார்ட்போன் 6.4-inch அளவு கொண்ட ஃபுல் எச்டி திரையுடன், மூன்று பின்பக்க கேமராக்களையும் ((48MP+5MP+8MP))கொண்டுள்ளது.
இதன் செல்ஃபி கேமரா 16 எம்.பியை கொண்டுள்ளது.
டைப் சி யூ.எஸ்.பி கேபிளை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
எக்ஸினாஸ் 9611 ப்ரோசசரை பெற்றுள்ள இந்த போனின் ஹைலைட்டான விசயம் இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி தான்.
6000mAh பேட்டரியை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உங்களின் நாள் முழுவதுமான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமாக மிக விரைவாக இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Samsung Galaxy M30s Smartphone price
4GB RAM மற்றும் 64GB கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,999
6GB RAM மற்றும் 128GB கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999
வடிவமைப்பு
இதன் பின்பக்கம் முழுக்க முழுக்க பாலிகார்பனேட் ப்ளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளாஸ் பேக் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதன் திக்னெஸூம் மிகக் குறைவு. 8.9 எம்.எம் என்ற அளவில் தான் உள்ளது. அதே போன்று எடையும் 188 கிராம். கைக்கு மிகவும் அடக்கமாக இருப்பதால் ஸ்லிப்பாவதற்கு வாய்ப்புகளே இல்லை.
மூன்று முக்கியமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. ஷாப்பைர் ப்ளூ நிறம் நீலம் மற்றும் பச்சை நிறக்கலவையாக மிக அழகாக தோற்றம் அளிக்கிறது. அதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் ஒபல் ப்ளாக் அல்லது பேர்ல் ஒயிட் நிறங்களில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.
பேட்டரி
மீண்டும் மீண்டும் இந்த ஸ்மார்ட்போனில் ஹைலைட் செய்து காட்டப்பட்டது இந்த ஃபீச்சர் தான். ஹெவியான பயன்பாட்டிற்கு பிறகும் கூட மூன்று நாட்கள் இதனால் தாக்குப்பிடிக்க இயல்கிறது. சராசரியான பயன்பாடு என்றால் 4 நாட்கள் வரை இந்த பேட்டரி தாக்குப்பிடிக்கிறது. 15 வாட்ஸ் சார்ஜர் வெறும் ஒரே மணி நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடுகிறது என்பதால் ஆன் - தி - கோ லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரியான ஸ்மார்ட்போன் இதுவாகும்.
மேலும் படிக்க : புகைப்பட கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.