சாம்சங் கேலக்ஸி எம் 32 விலை அதிரடி குறைப்பு: புதிய விலை விவரங்கள் இதோ !

ஒரு நல்ல கம்பெனி போன்தான் வேண்டும், அதுவும் சாம்சங்தான் நல்ல தேர்வு என்று நீங்கள் நினைத்தால், தற்போதே சாம்சங் கேலக்ஸி எம் 32 வாங்கலாம்.

ஒரு நல்ல கம்பெனி போன்தான் வேண்டும், அதுவும் சாம்சங்தான் நல்ல தேர்வு என்று நீங்கள் நினைத்தால், தற்போதே சாம்சங் கேலக்ஸி எம் 32 வாங்கலாம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான சாம்சங்கின் கேலக்ஸி எம்32 மாடல் போனின் விலையை சாம்சங் நிறுவனம் ரூ.2000 வரை குறைத்துள்ளது.

புதிய விலை விவரம்

இந்த மாடல் போன்கள் 4ஜிபி மற்றும் 6ஜிபி ராம்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியண்ட் விலையும் தற்போது ரூ.2000 வரை குறைத்துள்ளது.   தற்போது 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறைந்த விலையில் இருக்கும் இந்த போன்களை நீங்கள் வாங்கலாம். நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் போன்கள் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 32 சிறப்பம்சம்

6.4 இஞ்ச்  டிஸ்பிலே, கொரிலா கிலாஸ் 5-ல் இந்த போன் பாதுகாக்கப்பட்டுள்ளது. 4ஜிபி+64ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி இரண்டு வேரியண்டுகளிலும் 1 டிபி வரை சேமிக்கும் மெமரி கார்டு பயன்படுத்தலாம். 64 மெகாபிக்சல் கேமிரா, 8 மெகா பிக்சஸ் அல்டிரா வைடு மற்றும் 20 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டது. 6000 மெகாவாட் பேட்டரி, 25 வாட் சார்ஜிங் கொண்டது.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Samsung galaxy m32 news price and specifications