சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் இன்று (ஜூலை 7) அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் முந்தைய போன் வடிவத்தில் இருப்பதால் ‘சாம்சங் சிக்னேச்சர் டிசைன்’ என்று சொல்லப்படுகிறது. இது சிறந்த
மிட்- ரேஞ் ஸ்மார்ட் போன் ஆகும். சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட் போன் ரூ. 16,999-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3 நிறங்களில் Prism Silver, Midnight Blue மற்றும் Waterfall Blue நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் ஜூலை 16-ம் முதல் விற்பனை தொடங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஆனது 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே முழு HD+ ஸ்கிரீன் ரெசல்யூசன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது. சாம்சங் அதன் பாரம்பரிய வடிவமைப்பு மொழியைப் பின்பற்றி, முன்பக்கத்தில் இன்ஃபினிட்டி யுவைச் சேர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“