பிளிப்கார்ட் தளத்தில் பல்வேறு முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.15,000க்கும் குறைவான விலையில் அதுவும் சாம்சங் பிராண்ட் போன் உள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஸ்மார்ட்போனுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு குறிப்பிட்ட வங்கி சலுகைகள் பயன்படுத்தினால் மேலும் விலை குறைவாக பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போன் சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. தரமான எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் போன் இயக்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். சிறந்த செயல் திறன் கொண்டது. இந்த போன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
https://www.flipkart.com/samsung-galaxy-m34-5g-waterfall-blue-128-gb/p/itm90a930aba5695?pid=MOBGRUE4PNEHGH5Z&lid=LSTMOBGRUE4PNEHGH5ZDFP4DZ&marketplace=FLIPKART&store=tyy%2F4io
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்34 கேமராவுக்கான சிறந்த போன் ஆகும்.
அதோடு போன் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உடன் இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000mAh என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரி உடன் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“