ஏ.ஐ அம்சங்களுடன் பட்ஜெட் விலையில்... மாதம் ரூ.796 இ.எம்.ஐ-யில் சாம்சங் கேலக்ஸி M35 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி M35 5ஜி ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1380 பிராசஸர், 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, மற்றும் 6,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M35 5ஜி ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1380 பிராசஸர், 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, மற்றும் 6,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Samsung Galaxy M35 5G

ஏ.ஐ அம்சங்களுடன் பட்ஜெட் விலையில்... மாதம் ரூ.796 இ.எம்.ஐ-யில் சாம்சங் கேலக்ஸி M35 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி M35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் போன், கேலக்ஸி M36 5ஜி வெளியான பிறகு ஏற்கெனவே விலை குறைந்தது. இப்போது, அமேசான் தளத்தில் நடைபெற்று வரும் ஃப்ரீடம் சேல் (Freedom Sale) சலுகையில், அறிமுக விலையிலிருந்து ரூ. 9,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு, மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்புத் திறன் வரை கிடைக்கிறது.

Advertisment

சாம்சங் கேலக்ஸி M35 5ஜி மூன்று வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 18,999, 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 16,499, 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 26,999.

இந்தப் போனின்களின் அசல் விலையில் (MRP) ரூ. 24,499-ல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), டேபிரேக் ப்ளூ (Daybreak Blue), தண்டர் கிரே (Thunder Grey) ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. அத்துடன், வங்கி சலுகைகள், வட்டியில்லா இ.எம்.ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 8ஜிபி ரேம் வேரியண்ட்டை, மாதம் ரூ.796 என்ற குறைந்த இ.எம்.ஐ-யில் வாங்கலாம்.

6.6 இன்ச் முழு ஹெச்.டி+ சூப்பர் அமோலெட் (FHD+ Super AMOLED) டிஸ்பிளே. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டது. சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 1380 (Exynos 1380) பிராசஸர் இதில் உள்ளது. 8ஜிபி ரேம்+256ஜிபி உள் சேமிப்புத் திறன் வரை கிடைக்கிறது. பின் பகுதியில் 3 கேமராக்கள் உள்ளன.

Advertisment
Advertisements

50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 6,000mAh சக்திவாய்ந்த பேட்டரி, 25W யூ.எஸ்.பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன்யுஐ 6 (OneUI 6) இயங்குதளத்தில் இயங்குகிறது. சாம்சங்-ன் ஃபிளாக்ஷிப் போன்களைப் போலவே, கூகிள் ஜெமினி (Google Gemini) அடிப்படையிலான கேலக்ஸி ஏஐ (Galaxy AI) அம்சங்களையும் கொண்டுள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: