பட்ஜெட் விலையில் 4K கேமரா, AI அம்சங்கள்.. இன்று அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி M36 5G!

ரூ.20,000 பட்ஜெட்டில், 4K வீடியோ ரெக்கார்டிங், பெரிய பேட்டரி, AI அம்சங்கள் மற்றும் 5G இணைப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி M36 5G, பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.20,000 பட்ஜெட்டில், 4K வீடியோ ரெக்கார்டிங், பெரிய பேட்டரி, AI அம்சங்கள் மற்றும் 5G இணைப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி M36 5G, பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Samsung Galaxy M36 5G

பட்ஜெட் விலையில் 4K கேமரா, AI அம்சங்கள்.. இன்று அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி M36 5G!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி M36 5G (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (ஜூன் 27) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பட்ஜெட் விலை 5G ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இந்தப் போன் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Samsung Galaxy M36 5G சிறப்பம்சங்கள்:

கேமரா: OIS (Optical Image Stabilization) ஆதரவுடன் கூடிய 50 MP முதன்மை சென்சார் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் இடம்பெறும். தெளிவான மற்றும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க உதவும். மேலும், முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்டிங் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கும். குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த படங்களை எடுக்க உதவும் Auto Night Mode வசதியையும் இதில் உள்ளது.

டிஸ்ப்ளே: கேலக்ஸி M36 5G ஆனது 6.74 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1080 x 2340 பிக்சல் தெளிவுத் திறன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்கும். மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் பார்வை அனுபவத்தை வழங்கும். மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

செயல்திறன்: இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சொந்த எக்ஸிநோஸ் 1380 (Exynos 1380) சிப்செட் மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8GB RAM+128GB (அ) 256GB உள்ளீட்டு சேமிப்பகத்துடன் வரும். மேலும், Android 15-ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 உடன் வெளியாகும். 

பேட்டரி: Galaxy M36 5G ஆனது 6000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது நாள் முழுவதும் நீடித்த பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெறும்.

AI அம்சங்கள்: சாம்சங், இந்த பட்ஜெட் விலைப் போனில் சில Galaxy AI அம்சங்களையும் வழங்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூகிளின் Circle to Search (சர்க்கிள் டு சர்ச்) அம்சம் இதில் இடம்பெறும்.

வடிவமைப்பு: இந்த போன் 7.7 மிமீ தடிமன் கொண்டதாகவும், பின்புறத்தில் மேட் ஃபினிஷ் (matte finish) மற்றும் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வரும் என டீசர் படங்கள் காட்டுகின்றன. ஆரஞ்சு ஹேஸ் (Orange Haze), வெல்வெட் பிளாக் (Velvet Black) மற்றும் செரீன் கிரீன் (Serene Green) ஆகிய 3 வண்ண விருப்பங்களில் இது கிடைக்கும்.

ரூ.20,000 பட்ஜெட்டில், 4K வீடியோ ரெக்கார்டிங், பெரிய பேட்டரி, AI அம்சங்கள் மற்றும் 5G இணைப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி M36 5G, பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samsung

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: