Advertisment

எம் சீரியஸ் என்றாலே பட்ஜெட் போன் தான்... ஆனால் இந்த போனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை?

ஆரம்பத்தில் எம் சீரியஸ் போன்கள் சியோமி போன்களுக்கு போட்டியாக மிட்ரேஞ் போன்களாகவே அறிமுகம் செய்யப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy M40 Price, Specifications, Features

Samsung Galaxy M40 Price, Specifications, Features

Samsung Galaxy M40 Price, Specifications, Features : இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மிக விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  ஆரம்பத்தில் எம் சீரியஸ் போன்கள் சியோமி போன்களுக்கு போட்டியாக மிட்ரேஞ் போன்களாகவே அறிமுகம் செய்யப்பட்டன. அதன் விலையும் பட்ஜெட்டிற்குள் தான் இருந்தது. ஆனால் தற்போது வெளியாக இருக்கும் இந்த போனின் விலை ரூ.25,000 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Samsung Galaxy M40 Price, Specifications, Features

Infinity-O திரையுடன் வெளியாகும் முதல் மிட்ரேஞ்ச் போன் இது என்பதால் இதன் விலை சற்று கூடுதலாக இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சாம்சங் நிறுவனத்தின் அனைத்து போன்களும், தங்களின் சொந்த தயாரிப்பான எக்ஸினோஸ் ப்ரோசசருடன் தான் வெளியாகும். ஆனால் இந்த போன் மட்டும் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசரான 675வுடன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதே ப்ரோசசர் ரெட்மீ நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஏம்.எம்.ஓ.எல்.ஈ.டி திரை, 5000 mAh பேட்டரி, 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய் 9.0 பை இயங்குதளம், இரட்டை வைஃபை கனெக்சன் சப்போர்ட் என பட்டையை கிளப்புகிறது இந்த ஸ்மார்ட் போன்.

இதற்கு முன்பு இந்த சீரியஸில் வந்த போன்களின் விலை

கேலக்ஸி எம் 10 (Galaxy M10) - ரூ. 7,999

கேலக்ஸி எம் 20 (Galaxy M20) -  ரூ. 10,990

கேலக்ஸி எம் 30 (Galaxy M30) - ரூ. 14,990

மேலும் படிக்க : ஜியோவின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment