இளைஞர்கள் விரும்பும் சாம்சங் கேலக்ஸி M51: பிளஸ்- மைனஸ் பற்றி விரிவான அலசல்

Samsung Galaxy M51: குறைந்த வெளிச்சத்திலும், படங்கள் நன்றாக இருந்தன. M51-ன் கேமரா செயல்திறனை பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

By: September 20, 2020, 8:48:27 PM

Samsung Galaxy M51 Review by Anuj Bhatia: “சில நேரங்களில் ஓர் பொருளின் தன்மை, அது பயனரைப் பாதிக்கும் விதம், ஏன் அந்தப் பொருள் முதலிடத்தில் இருக்கிறது போன்றவற்றைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும். ஆனால், அதற்கான சரியான தகவலைப் பெறும்போது, அந்தப் படைப்பை ​​அப்படியே ஏற்றுக்கொள்வது எளிது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி M51 உடனான என் அனுபவத்தை நான் இங்குப் பகிர்ந்துகொள்கிறேன். ஏராளமான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தாலும், கேலக்ஸி M51-ன் எளிமையான டிசைன்தான் அதன் வாடிக்கையாளருக்கு என்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி M51 பற்றிய எங்களின் விரிவான விமர்சனம் இங்கே.

சாம்சங் கேலக்ஸி M51 விவரக்குறிப்புகள்:

6.7-இன்ச் FHD + சூப்பர் AMOLED Plus Infinity-O டிஸ்பிளே | குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 G ப்ராசசர், 6 GB RAM + 8 GB RAM / 128 GB சேமிப்பு இடம் | ஆண்ட்ராய்டு 10, OneUI 2.1 | 7000mAh பேட்டரி, 25W வேகமான சார்ஜிங் ஆதரவு | மைக்ரோ SD கார்டு ஸ்லாட் | குவாட் கேமரா அமைப்பு, 32 MP முன் கேமரா

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M51-ன் விலை: ரூ.24,999 முதல் ஆரம்பம்.

சாம்சங் கேலக்ஸி M51 விமர்சனம்: இதில் என்ன புதிது?

பார்ப்பதற்கு சாம்சங்கின் மிகவும் பிரபலமான இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களான கேலக்ஸி M31s மற்றும் கேலக்ஸி A51 போன்றுதான் கிட்டத்தட்ட கேலக்ஸி M51 மாடலும் இருக்கிறது. ஆனால், கேலக்ஸி M51-ன் வடிவம், அழகியல் நுட்பம் அதன் வளைந்த விளிம்புகள் மற்றும் பிளாஸ்டிக் உருவாக்கம் போன்றவை மற்ற மாடல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. கேலக்ஸி S20 சீரிஸ் போலவே, இதன் இடது மேல் பகுதியில் செவ்வக பின்புற கேமரா தொகுதி இருக்கிறது. இதிலிருக்கும் மிகவும் மெலிதான பெசல்கள் (bezels) அதன் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது.

6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மிகப்பெரிய போன் இந்த கேலக்ஸி M51. சிறிய கைகள் உடையவர்களுக்கு, இதனைப் பிடித்து உபயோகிப்பதற்குச் சிரமமாக இருக்கலாம். 213 கிராம் எடைகொண்ட இந்த போனில், 7000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் சற்று கனமானதாகவே இருக்கிறது.

There are four cameras on the back of the Galaxy M51. (Image credit: Anuj Bhatia/Indian Express) There are four cameras on the back of the Galaxy M51. (Image credit: Anuj Bhatia/Indian Express)

இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் உள்ள பவர் பட்டனுக்குள் பதிக்கப்பட்ட கைரேகை சென்சார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முந்தைய கேலக்ஸி M ஸ்மார்ட்போன்களைப் போலவே இந்த போனில் இருக்கும் கைரேகை ரீடர் விரைவாகச் செயல்படுகிறது. 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் USB-C போர்ட் இதில் உள்ளது. கீழ் பேனலில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் (headphone jack) உள்ளன. மொபைலின் வலது பக்கத்தில் உள்ள நானோ சிம் / மைக்ரோ SD கார்டு ட்ரே, உள் சேமிப்பு (internal storage) இடத்தை விரிவாக்க ஏதுவாக இருக்கிறது. மைக்ரோ SD ஸ்லாட்டுடன் கூடிய ரிவ்யூ யூனிட் 8 GB RAM மற்றும் 128 GB சேமிப்பிடத்தைக் கொண்டிருக்கிறது.

Samsung Galaxy M51 review The side-mounted fingerprint sensor is quick and fast. (Image credit: Anuj Bhatia/Indian Express)

கேலக்ஸி M51, நீர் மற்றும் தூசி ரெசிஸ்டன்ஸுக்கான IP மதிப்பீட்டை வழங்கப்படவில்லை. ஆனால், அது வழக்கமான பயனர்களுக்குப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.

சாம்சங் கேலக்ஸி M51 விமர்சனம்: இதில் என்ன நன்மை?

முன் கேமராவிற்காக, சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளேவின் நடுவில் ஓர் hole-punch cutout  டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இது 20:9 விகிதம் மற்றும் 2400 × 1,080p தெளிவுத்திறன் கொண்ட 6.7 அங்குல டிஸ்பிளே. சிறந்த கோணங்கள் மற்றும் வைப்ரன்ட் வண்ணங்களுடன் இந்த மொபைலின் ஸ்க்ரீன் மிகவும் அருமையாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி S20 பிளஸ் போன்ற சாம்சங்கின் சிறந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படுவது போல் வளைந்த டிஸ்பிளே மாடல் அல்ல. வழக்கமான ஃபிளாட் (Flat) டிஸ்ப்ளே மாடல் போன்தான்.

தொலைப்பேசிகளில் கூடுதல் பெரிய  டிஸ்பிளே கொண்ட மாடல்களின் ரசிகன் நான் அல்ல. ஆனால், ஜம்போ அளவிலான டிஸ்பிளே விரும்பிகளைப் பற்றி நன்கு தெரியும். 6.7 அங்குல ஸ்க்ரீன் அளவு திரைப்படங்கள் பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும், ஆவணங்களைத் திருத்துவதற்கும் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை இயக்குவதற்கும் சரியானதாக இருக்கும்.

Samsung Galaxy M51 phone review The screen looks fantastic with excellent viewing angles and vibrant colours. (Image credit: Anuj Bhatia/Indian Express)

கேலக்ஸி M51-ன் செயல்திறன் ஆச்சரியமானது. இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்சு சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 730G (Snapdragon 730G) ப்ராசசரை பயன்படுத்துகிறது. அதனால், குறைபாடற்ற முறையில் M51 செயல்படுகிறது. கால் ஆஃப் டூட்டி: மொபைல் மற்றும் சோனிக் டாஷ் போன்ற கேம்களை விளையாடும்போதும் செயலிகளை இயக்கும்போதும் எந்தவித செயலிழப்புகளும், திரை முடக்கம் அல்லது தடுமாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. 5G-யை ஆதரிக்கவில்லை என்றாலும் அது ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. அழைப்பு தரம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஸ்பீக்கர் தரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

கேலக்ஸி M51-ல் எனக்குப் பிடித்த பகுதி அதன் பேட்டரி ஆயுள்தான். இதில் 7000mAh கேபிட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதிக பயன்பாட்டுடன், சார்ஜரை மீண்டும் சாக்கெட்டில் இணைப்பதற்கு எனக்கு முழுமையாக ஒன்றரை நாள் ஆனது. நீங்கள் மொபைலை மிதமாகப் பயன்படுத்தினால் பேட்டரி ஆயுள் எளிதாக இரண்டு நாட்களை தாண்டும். சாம்சங்கின் 25W ஃபாஸ்ட் சார்ஜரான USB-C பயன்படுத்தி இதனை சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்தத் தொலைப்பேசியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 100 நிமிடங்கள் வரை தேவைப்படுகிறது.

Samsung Galaxy M51 phone review You can run two apps at the same time with the Split Screen view mode. (Image credit: Anuj Bhatia/Indian Express)

கேலக்ஸி M51 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன; சோனி IMX682 லென்ஸுடன் 64MP முதன்மை கேமரா; 5MP டெப்த் கேமரா; 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் கேமரா. முன்பக்கத்தில், 32MP கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மொபைலில் உள்ள முதன்மை கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் சிறந்த தரத்தை வழங்குகின்றன. பகல் நேரத்தில் எனக்குச் சிறந்த புகைப்படங்கள் கிடைத்தன. சில நேரங்களில் கேமரா, புகைப்படங்களை மிகைப்படுத்துகிறது. ஆனால், அதுதான் சாம்சங் சாதனங்களின் தனித்துவம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் கேமராவிலிருந்து எதிர்பார்ப்பது இதுதான் என்று நான் நினைக்கிறேன்.

Samsung Galaxy M51 phone review Live mode adds blur to the background. (Image credit: Anuj Bhatia/Indian Express)

 

Samsung Galaxy M51 phone review The Galaxy M51’s camera takes good shots during the dusk. (Image credit: Anuj Bhatia/Indian Express)

 

Samsung Galaxy M51 phone review Photos had the typical Samsung vibrancy. (Image credit: Anuj Bhatia/Indian Express)

குறைந்த வெளிச்சத்திலும், படங்கள் நன்றாக இருந்தன. இருண்ட அல்லது தீவிர இருட்டில் புகைப்படம் எடுக்கும்போது, நைட் மோட் (night mode) துல்லியமாக செயல்படுகிறது. குறைந்த வெளிச்சத்தில் M51-ன் கேமரா செயல்திறனை பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

Samsung Galaxy M51 phone review Shot in the ditch dark. (Image credit: Anuj Bhatia/Indian Express)

 

Samsung Galaxy M51 phone review Shot in the ditch dark – but this time using a dedicated night mode. (Image credit: Anuj Bhatia/Indian Express)

 

Samsung Galaxy M51 phone review I shot this photo in the early morning. (Image credit: Anuj Bhatia/Indian Express)

 

வெவ்வேறு கேமரா லென்ஸ்களை மாற்றுவது வேகமாகவும் விரைவாகவும் இருக்கிறது. அதேபோல வெவ்வேறு தூரங்களில் autofocusing ஆப்ஷனை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை. அல்ட்ரா-வைட் கேமராவும் சிறப்பாக இருக்கிறது. புகைப்படங்கள் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன. இதில் பொருத்தப்பட்டிருக்கும் பிரத்தியேக 5MP கேமரா, மேம்பட்ட போர்ட்ரெயிட் காட்சிகளை உருவாக்குகிறது. ஆனால், 5MP மேக்ரோ லென்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமானதாக இல்லை. 32 MP செல்ஃபி கேமரா மிகவும் நன்றாகவே இருக்கிறது. குறைந்த வெளிச்சத்திலும், செல்ஃபிகள் தெளிவாக உள்ளன.

கேலக்ஸி 51, நல்ல 1080p வீடியோக்களை பதிவு செய்கிறது. மிகவும் சவாலான லைட்டிங் நிலைமைகளில்கூட இந்த மொபைலில் துல்லியமான காணொளிகளைப் பதிவுசெய்ய முடியும். கேலக்ஸி M51-ன் 4K வீடியோ பதிவு திறன்களை என்னால் முழுமையாகச் சோதித்துப் பார்க்க முடியவில்லை.

Samsung Galaxy M51 phone review Playing a game like Call of Duty: Mobile is fluid on the Galaxy M51. (Image credit: Anuj Bhatia/Indian Express)

சாம்சங் கேலக்ஸி M51 விமர்சனம்: இதில் இருக்கும் குறைபாடுகள் என்னென்ன?

ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட சாம்சங்கின் சொந்த OneUI 2.1 மூலம் கேலக்ஸி M51 இயங்குகிறது. OneUI 2.0 பெருமளவில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், சாம்சங்கின் ஸ்கின் குறித்து எனக்கு இன்னும் சில புகார்கள் உள்ளன. இரண்டு ஆப் ஸ்டோர்கள், இரண்டு வெப் பிரௌசர்கள் மற்றும் இரண்டு வாய்ஸ் அசிஸ்டன்ட் இருப்பதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. இரண்டு வாய்ஸ் அசிஸ்டன்ட்களை தொலைப்பேசியில் யாரும் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே!

Samsung Galaxy M51 phone review The Galaxy M51 runs Android 10 with Samsung’s One user interface on top. (Image credit: Anuj Bhatia/Indian Express)

சாம்சங் கேலக்ஸி M51 விமர்சனம்: நீங்கள் இதை ஏன் வாங்கவேண்டும்?

6.7 அங்குல AMOLED ஸ்க்ரீன், ஸ்னாப்டிராகன் 730G ப்ராசசர், 7000mAh பேட்டரி, குவாட் கேமராக்கள் என இவ்வனைத்தும் வெறும் 24,999 ரூபாயில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி M51, நிச்சயமாக இடைப்பட்ட பிரிவில் நீங்கள் காணக்கூடிய மிக முழுமையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளே என வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல புதிய சிறப்பம்சங்களுடன் உருவாகி இருக்கும் இந்த மொபைல் பயன்படுத்துவது உற்சாகமாக உள்ளது. கேலக்ஸி M51 அனைவரையும் ஈர்க்கும் என்று நினைக்கிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Samsung galaxy m51 mobile review

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X