/indian-express-tamil/media/media_files/2025/04/18/NEMIK2jy76DjRouHUi4D.jpg)
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய திரைப்படம் வெளியாக தவறினாலும் கூட, ஒவ்வொரு மாதமும் ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு வருவதற்கு தவறுவதில்லை. தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன் வரிசையில் சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து கேலக்ஸி எம்56 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் இப்போது வெளியாக உள்ளது.
மிட் ரேஞ்ச் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை குறிவைத்து இந்த ஸ்மார்ட்போனில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளத்துடன் கேலக்ஸி எம்56 போன் செயல்படுகிறது. அடுத்தகட்டமாக 6 ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் வரை இதில் சப்போர்ட் ஆகும் விதமாக இதனை வடிவமைத்துள்ளனர். இது வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
மேலும், 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இந்த போனில், ஃபாஸ்ட் சாரிஜிங் வசதி இடம்பெறுகிறது. 6.7 இன்ச் தொடுதிரையுடன் ஃபுல் ஹெச்டி சூப்பர் அமலோட் டிஸ்பிளே இதில் இருக்கிறது. இது தவிர 1480 எக்ஸினாஸ் ஆக்டோ கோர் பிராசஸர் இதில் உள்ளது. போனை அதிகமாக பயன்படுத்தினாலும் குறைவான அளவே வெப்பம் வெளியேறும் வகையில் வேப்பர் சேம்பர் கூலிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் கேமரா உள்ளன. இது தவிர 12 மெகாபிக்ஸல் கேமரா ஒன்று முன்பக்கமாக உள்ளது. இரண்டு வேரியண்ட்களாக இந்த கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. லைட் க்ரீன் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இவை கிடைக்கின்றன.
8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ. 27,999 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஷோரூம்களில் வாங்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.