/tamil-ie/media/media_files/uploads/2019/08/EBblL5RWsAAjOfx.jpg)
Samsung Galaxy Note 10, 10+ smartphone Prices in India
Samsung Galaxy Note 10, 10+ smartphone Prices in India : இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியான கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் வெளியான இந்த ஸ்மார்ட்போன்களில் நோட் 10-ன் ஆரம்ப விலை ரூ.69,999 ஆகும். நோட் 10 ப்ளஸ் போன்களின் ஆரம்ப விலை ரூ. 79,999 ஆகும் ( 8GB RAM + 256GB ). 12GB RAM + 512GB இந்த ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலையோ ரூ. 89,999 ஆகும்.
ஆகஸ்ட் 8ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட், அமேசான்ன், பேடிஎம் மற்றும் டாட்டா க்ளிக் போன்ற வர்த்தக விற்பனை தளங்களில் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கான ஸ்மார்ட்போன் ஷிப்பிங் 23ம் தேதியில் இருந்து துவங்குகிறது.
முழுக்க முழுக்க பிஸினஸ் க்ளாஸ் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ப்ரீமீயம் ஸ்மார்ட்போன்களை உலகெங்கும் அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் ஔரா க்ளோ, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகின்றன. பெங்களூருவில் இருக்கும் ஒபேரா ஹவுஸில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக விழாவை 12 மணியில் இருந்து லைவ் டெலிகாஸ்ட் செய்தது அந்நிறுவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.