Samsung Galaxy Note 10, Galaxy Note 10 Plus launch : சாம்சங் நிறுவனத்தின் இந்தோனேசியா ட்விட்டர் ஹேண்டலில் இருந்து ஒரு டீசரை வெளியிட்டது சாம்சங். வர இருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட் டிவைஸின் டீசர் அது. இதற்கு முன்பு வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் டீசர் முழுக்க முழுக்க கேமரா, ஸ்டோரேஜ் என்று டிவைஸ் குறித்ததாகவே இருந்தது. ஆனால் தற்போது வெளியான நோட் 10 டீசர் பிஸினஸ் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு டிவைஸ் எப்படி செயல்படும் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy Note 10 சிறப்பம்சங்கள்
ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10+ என்ற டிவைஸ்களும் வெளியாக உள்ளன. ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களின் படி இந்த இரண்டு டிவைஸ்களும் நான்கு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. அதில் மூன்று கேமரா சென்சார்களாகும். மற்றொன்று டைம் ஆஃப் ஃப்ளைட் சென்சார் ஆகும். 2K ரெசலியூடனுடன் கூடிய 6.28 அளவுள்ள ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளாது இந்த ஸ்மார்ட்போன். (நோட் ப்ளஸ் 6.75 அளவு)
Samsung Galaxy Note 10 வெளியீடு
ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நியூயார்க் நகரில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். இநந்திய நேரப்படி ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலை 01:30 மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இதனை நீங்கள் samsung.com என்ற இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : ட்விட்டரில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்!